My dear Santa.. என் இனிய சான்டா கிளாஸுக்கான ஆசைகள்!
Dec 23, 2025,04:27 PM IST
என் சாண்டா கிளாஸுக்கான ஆசைகள்
என் மனமார்ந்த ஆசைகள் சாண்டாவுக்கே,
அன்பு சாண்டா… இதோ என் ஆசைகள்
அக்கறையுடன் பிறக்கும் ஆசைகள்,
பகிர்ந்தால் பெருகும் மகிழ்ச்சிகள்.
கனவுகளும் களிப்பும்,
கிறிஸ்துமஸ் இரவில் இனிமையும்.
நம்பிக்கையும் உற்சாகமும்,
சாண்டா அருகிலே வந்த தருணமும்.
இரவெல்லாம் நம்பிக்கை
காலை முழுதும் ஒளி.
ஒலிக்கும் மணிகள்,
மகிழ்ச்சியைத் தரும் நிமிடங்கள்.
அன்பும் சந்தோஷமும்,
ஆண்டின் முடிவை இனிதாக்கும்.
களிப்பும் சிரிப்பும்,
எனக்கான பரிசுகளும்.
பனிபோல் வெண்மை,
மனங்கள் இலகுமை.
நம்பிக்கை கண் முன்,
கனவுகள் சிறகடிக்கும்.
ஆழமான நம்பிக்கை,
காக்கப்படும் வாக்குறுதிகள்.
(வி.ரஞ்சனி வீரா, தென் தமிழ் எழுத்தாளர், ஆங்கில ஆசிரியர் பட்டதாரி, பாண்டிச்சேரி)