விலங்குகள் பேசினால்!
-என். காஞ்சனப்பிரியா
ஐந்தறிவு என்றே விலங்கை எண்ணுகிறோம்,
அறிவில்லை என்றே நாமும் நம்புகிறோம்,
ஆனால் உண்மை அதுவல்லவே,
அவை அறிவில் குறைந்ததல்லவே!
காகம், யானை, நாய்களெல்லாம்,
கூர்மையாக புலனை ஆளுதம்மா!
பானை நீரை உயர்த்திய காகம்,
நம் கதைகளில் வாழும் தாகம்.
மனிதரெனும் நாமும் தானே,
வேறொரு உயிரென எண்ணுகிறோமே,
ஆனால் அவை பேசிடுமானால்,
நம்மிடம் இதைத்தான் கேட்குமம்மா!
"ஆடம்பரத்திற்காய் மரம் வெட்டாதீர்,
வாழும் வீட்டை நீங்கள் கெடுக்காதீர்!
காற்று, நீர், நிலம் காக்க வேண்டும்,
கலப்படமில்லா உணவு வேண்டும்!
மரங்கள் நட்டு மண்ணைக் காப்பீர்,
நல்ல நெறியை பிள்ளைக்கு சொல்வீர்!
இது எங்களுக்கான கோரிக்கை அல்ல,
இவ்வுலகம் வாழ வழி இது அல்லவா!
உங்களை மட்டும் காக்க நினையாதீர்,
இயற்கையை முதலில் காக்க மறவாதீர்!
இயற்கை காத்தால் நீங்கள் வாழ்வீர்,
வருங்காலமும் நன்றாய் வாழுமம்மா!"
(N. காஞ்சனப்பிரியா, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆலாங்காட்டுவலசு, பள்ளிபாளையம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்)