ஏதோ ஒன்று!

Su.tha Arivalagan
Nov 26, 2026,11:03 AM IST

- "நாவரசி" ந.வனிதா


உனக்கும் எனக்குமாய் 

ஒன்றும் இல்லை 

ஆமாம்... 

ஒன்றும் இல்லை தானே 


வழக்கமான இடத்தில் 

வழக்கமான பார்வை இல்லை... 


தேநீர் வேளையின் போதும் 

கண்ணில் படவே இல்லை.. 

ஏனோ தேடிற்று கண்கள் ...





எப்படியும் நாளொன்றுக்கு 

எதிரும் புதிருமாக 

நான்கைந்து சந்திப்புகள் 

இன்று அதுவும் இல்லை....


பழக்கடை இளநீர் கடை 

எங்கும் கண்ணில் சிக்கவில்லை 

ஏனோ தேடிற்று மனம்....


தினம் தினம் 

உன்னை பார்த்த போது கூட 

இத்தனை முறை நினைத்ததில்லை...


காணாத இன்று ஒரு நாள் மட்டும் 

காலை முதல் இப்போ வரை 

எத்தனையெத்தனை முறை....


நமக்குள் எதுவும் 

இல்லை தானே 

இல்லை....

ஏதோ ஒன்று இருக்கிறதா? 


(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர், இசைச் சுவைஞர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)