Saturday Vibes: எனக்கு ஏனோ உன் ஞாபகம்!
- "நாவரசி" ந. வனிதா
பூமியின் பூபாளமே.
இதுதானோ...
விரைந்து சென்றது
பேருந்தும்
மனதைப் போல...
வெள்ளை பனிமூட்டம் மலையினை
ஆர்வத்தோடு தழுவ..
எனக்கு ஏனோ உன் ஞாபகம்..
வளைவு நெளிவுகளில் வசந்த கால ஊற்றுகள்
என்னுள்ளும் ஜீவ ஊற்றுகள்...
எனக்கு ஏனோ உன் ஞாபகம் ...
தழைத்தோங்கிய பசுமரத்தைச் சுற்றி
படரும் கொடியைக் காண...
எனக்கு ஏனோ உன் ஞாபகம் ....
அங்கங்கே வண்ண வண்ண பூக்கோலங்கள்
கூடவே பூத்தது மனசுகுள்ளும்...
எனக்கு ஏனோ உன் ஞாபகம்....
பனியிறங்கி உடல் தொடுகையில்
உயிர் குளிருதய்யா...
எனக்கு ஏனோ உன் ஞாபகம் அன்பே!....
உனக்கும் இல்லையா இதுபோல்...
எனக்கு மட்டும்...
எப்போதும் ....
உந்தன் ஞாபகம் அன்பே.....
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர், இசைச் சுவைஞர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)