- "நாவரசி" ந.வனிதா
எழில் எப்போதும் போல சீக்கிரமாக எழுந்து விடியற்காலையை ரசிக்க ஆரம்பித்து விடுவாள். சுட சுடக் காபியை போட்டு சேரில் அமர்ந்தபடி ரசித்து முதல் உறிஞ்சை உறிஞ்சினாள். அளவான சர்க்கரை சிறு கசப்புடன் கூடிய அந்த காபியின் நறுமணம் முதல் உறிஞ்சில் கம கம வென்று மூளையை குடைந்து நாவில் நர்த்தனம் ஆடியது .
விரைந்து காலைச் சிற்றுண்டி ,மதிய உணவு தேநீர் இடைவேளைக்கு சிறு நொறுக்குகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு காலை 8 .20 மணிக்கே ஸ்கூட்டியை தட்டிக் கொடுத்தாள்
அதற்குள் அவளைப் பற்றி..
பெயருக்கு ஏற்றபடி அவள் மாநிறத்துடன் கூடிய சற்று பூசினால் போல தேகம். எப்போதும் காட்டன் புடவைகளையே நேர்த்தியாக கட்டுவாள். அலங்காரம் .. அவளுக்கு அது எதுக்கு ? அதற்குள் பொது மாறுதலில் பெற்ற புதுப்பள்ளிக்கு வந்துவிட்டாள். பள்ளியை வெளியிலிருந்து நோட்டம் விட்டாள். சுமார் 150 குழந்தைகள் படிக்கும் தலைமை ஆசிரியருடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆசிரியர்கள்.

வழக்கமான வணக்கங்கள், அறிமுகங்கள் தாண்டி தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். காலை வழிபாட்டுக்கூடம் முடிவடைந்த பிறகு அவளுக்கு ஐந்தாம் வகுப்பு மனதார கொடுக்கப்பட்டது. அந்த வகுப்பில் மொத்தமே 27 குழந்தைகள். அதில் வெண்ணிலா என்ற சிறுமி இவளிடம் மிக வேகமாக ஒட்டிக்கொண்டாள்.
முழு ஆண்டு தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருந்தது. வெண்ணிலா எல்லா பாடத்திலும் படுசுட்டி. நல்ல உருண்டையான களையான முகம். இரட்டை பின்னல்கள், மாவடு கண்கள் என இறக்கை இல்லாத அழகு தேவதை .
எழிலும் சின்ன குழந்தைகளுக்கு ஏற்றபடி நிறைய கதைகள், பாடல்கள் சொல்லித் தருவாள். விளையாட்டுப் போட்டிகளும் வைப்பாள். அதனால் குழந்தைகளுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அந்த வருடம் முழு ஆண்டு தேர்வை மாணவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதி முடித்தனர் .
விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டிற்கு அந்த மாணவ மாணவிகள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டி இருக்க அலுவல வேலை முனைப்போடு நடந்து கொண்டிருந்தது. மே மாத லீவு எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை .
அடுத்த கல்வியாண்டின் முதல் நாள் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றாள் எழில். புது குழந்தைகளை சந்திக்க புதிய உற்சாகத்தோடு சென்றாள். போன கல்வியாண்டின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும் அல்லவா.. அதனால் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது வெண்ணிலாவும் அவர் அப்பாவும் மாற்றச் சான்றிதழ் வாங்கப் பள்ளிக்கு வந்தார்கள்.
அவளோ வரும்பொழுது அழுது அழுது வீங்கிய முகத்தோடு வந்தாள். உள்ளே வரும்பொழுது டீச்சர், நான் எங்கேயும் போக மாட்டேன். நான் இங்கேயே படிக்கிறேனே, இங்கே ஆறாவது சேந்துக்கறேன். நான் எங்கேயும் போக மாட்டேன். இல்லைனா நீங்களும் என் கூட வாங்க டீச்சர் போலாம். அப்பா நான் இங்கேயே படிக்கிறேன் என்று ஒரே கத்து கத்தி கொண்டு அழுதாள்.
அவளை பார்க்கும் பொழுது மற்ற குழந்தைகளுக்கும் அழுகை வந்துவிட்டது. வேகமாக அவங்க அப்பா கையை உதறிவிட்டு எழிலை நோக்கி ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். எழிலுக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கட்டுப்படுத்தவும் தெரியவில்லை. இருந்தாலும் மனதை தேற்றிக்கொண்டு வெண்ணிலாவுக்கு மென்மையாக புரிய வைத்தாள்.
திரும்பி திரும்பி பார்த்து அழுது கொண்டே அந்த குழந்தை சென்றது இன்னும் அவள் நினைவில். அன்று இரவு வீட்டிற்கு வந்து அவளுடைய படுக்கையில் படுத்த பிறகும் அவளால் கண்ணை மூடவே முடியவில்லை.
அந்த வெண்ணிலாவின் மாவடு கண்களில் இருந்து வந்த கண்ணீர் மட்டுமே நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது .
அதற்குப் பிறகு எத்தனையோ ஆயிரம் வெண்ணிலாக்களை அனுப்பிவிட்டாள். ஆனால் அவள் கண்ணில் பதிந்த அந்த முதல் வெண்ணிலாவை அவளால் மறக்கவே முடியவில்லை .
யார் சொன்னது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பாச உணர்வு குறைந்தது என்று.
யார் சொன்னது ஒரு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் உள்ளது தாய் குழந்தை பாசம் இல்லை என்று..
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இருக்கும் நெருக்கம் எந்த வார்த்தையும் போட்டு நிரப்ப முடியாது என்று யாருக்கு புரியும்.
எத்தனை எழில்கள் எத்தனை வெண்ணிலாக்களை பார்த்தபடி காலச் சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும்.
ஏதேனும் ஒரு வெண்ணிலாவாது பதில் சொல்லுவார்கள் அல்லது ஏதேனும் ஒரு எழிலாவது எனக்கு பதில் சொல்லுவாங்க.
(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர், இசைச் சுவைஞர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)
முன்கோபம்
எத்தனை வெண்ணிலாக்களோ?
திருப்பரங்குன்றம் விவகாரம் : ஆட்சியை கலைக்க பாஜக மனு...தீபம் ஏற்றாததற்கு ஆட்சி கலைப்பு சாத்தியமா?
"இது அறிவுலகமா? அல்லது ஊழல் உலகமா?": கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் காரசாரப் பேச்சு
ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆளுநர் ஆர்லேகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு –தமிழக அரசு மீது புகார்
தென்தமிழ் தலையங்கம்: சட்டப் புத்தகத்தைத் தாண்டி... அரசமைப்பு உணர்த்தும் வாழ்வியல்!
Paruppu Vadai: வெளியில் மழை பெய்யுதா.. கிச்சனுக்குள்ள வாங்க.. பருப்பு வடை செய்வோம்!
sankarankovil special: சங்கரன்கோவில் என்றாலே உடனே என்ன நினைவுக்கு வரும் தெரியுமா?
{{comments.comment}}