கள்ளமில்லா புன்னகையால் .. கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள்

Su.tha Arivalagan
Jan 24, 2026,04:32 PM IST

- பா.பானுமதி


சிரிக்கும் செல்ல குட்டிகள் 

இனிக்கும் வெல்ல கட்டிகள் 


சிந்திக்கும் சீருடை செல்வங்கள் 

சீராக்கும் முப்பெரும் தெய்வங்கள் 


வாழ்த்துக்கள் சொல்லிய வைரங்கள் 

வணக்கத்துக்குரிய வைடூரியங்கள் 


கள்ளமில்லா புன்னகையால் 

கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள் 


மெல்ல வளர்ந்து மெய் சிலிர்க்க வைக்கும் 

அழகு முயல்கள் 




குடும்பத்தை காக்கும் குல விளக்குகள்

நாட்டை நலமாக்கும் வெளிச்ச மொட்டுக்கள் 


வீட்டை போற்றும் வெள்ளி மணிகள் 

விண்வெளியில் விளையாட போகும் வெண் மணிகள் 


பெற்றோரின் பிரியமான கண்மணிகள் 

உற்றோர் உளம் கனிந்த பெண்பிள்ளைகள் 


இந்த நன்னாளில் நலங்கள் பெற்று 

பலங்கள் மிக்கு.... பல்லாண்டு வாழி..