வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
Jan 24, 2026,03:07 PM IST
- தி.மீரா
பெண் குழந்தை ஒரு பிறவி அல்ல,
புது உலகின் முதல் விடியல்.
அவள் சிரிப்பில் தொடங்குகிறது
நாளைய நம்பிக்கை.
மண்ணில் விழும் விதையாய்,
மகத்தான மரமாய் வளர்கிறாள்.
கனவுகளை கண்களில் சுமந்து
காலத்தை மாற்றுகிறாள்.
கல்வி அவளின் இறக்கைகள்,
தைரியம் அவளின் வாள்.
அன்பால் உலகை வெல்லும்
அமைதியான புரட்சி அவள்.
அவளை காக்கும் சமூகம்
தன்னையே காக்கும்.
பெண் குழந்தை மதிக்கப்படும் நாள்
தேசம் உயர்ந்து நிற்கும் நாள்.
அவள் கேள்விகள் விதை போடுகின்றன,
பதில்கள் புரட்சியாக மலர்கின்றன.
வீட்டின் வாசலில் நின்றாலும்
வானம் வரை கனவு காண்கிறாள்.
பெண் குழந்தை சிரிக்கும் உலகமே
உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)