கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!
Jan 24, 2026,03:02 PM IST
- ச.சுமதி
சிறுமி சிரிப்பில் சூரிய ஒளி,
சிந்தனை கண்களில் கனவு ஒளி.
கைகள் மெலிந்தாலும்,
கனவுகள் வலிமை கொண்டவை.
அவள் பிறப்பு சுமையல்ல,
அவள் எதிர்காலம் செல்வம்.
புத்தகமே அவள் பொம்மை,
பயிற்சியே அவள் சிறகு.
கேள்விகள் கேட்கும் துணிவு,
காலத்தை மாற்றும் திறன்.
பாதுகாப்பு அவள் உரிமை,
படிப்பு அவள் அடையாளம்.
இன்று கொண்டாடுவோம்,
நாளை காப்போம்—
பெண் குழந்தையை,
பிரகாசமான இந்தியாவை.
(ச. சுமதி, M.A., B.Ed., பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி, ஆடுதுறை)