இன்றைய சமுதாயத்தின் நம்பிக்கை.. நாளைய தலைமுறையின் தூண்கள்.. பெண் குழந்தைகள்!

Jan 24, 2026,02:09 PM IST

- வ.சரசுவதி


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்கி, அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள் ஆகும்.


தினத்தின் முக்கியத்துவம்




பெண் குழந்தைகள் சமூகத்தின் அடித்தளம். அவர்கள் கல்வியறிவு பெற்றால் குடும்பம் உயர்வடையும்; குடும்பம் உயர்ந்தால் சமூகம் முன்னேறும். ஆனால், இன்னும் பல இடங்களில் பெண் குழந்தைகள் கல்வி மறுப்பு, குழந்தை திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான சவால்களை உணர்த்தி, தீர்வுகளை நோக்கிச் செல்ல இந்த நாள் உதவுகிறது.


வரலாற்றுப் பின்னணி 


2008ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய பெண் குழந்தைகள் தினம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த தினம், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை நினைவுகூறும் விதமாக தேர்வு செய்யப்பட்டது. பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்தார்.


பெண் குழந்தைகளின் உரிமைகள் 


பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்குச் சமமான உரிமைகள் உண்டு. கல்வி பெறும் உரிமை, ஆரோக்கியமான வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம், சம வாய்ப்புகள். இவை அனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும். பெண் குழந்தை பிறப்பு  சுமை அல்ல, செல்வம் என்ற எண்ணம் சமூகத்தில் வேரூன்ற வேண்டும்.


அரசு முயற்சிகள்


பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ, சுகன்யா சம்ருத்தி யோஜனா, கன்யாஸ்ரீ, மகள் இரண்டாம் நிலை கல்வி உதவித் திட்டங்கள் போன்றவை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கின்றன.


சமூகத்தின் பொறுப்பு


பெண் குழந்தைகளை மதித்து, அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவது பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண் குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை வளர்க்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.


பெண் குழந்தைகள் இன்றைய சமுதாயத்தின் நம்பிக்கை நாளைய தலைமுறையின் தூண்கள். தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு நாள் விழாவாக மட்டுமல்ல, நாள்தோறும் பின்பற்ற வேண்டிய எண்ணமாக மாற வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பாகவும், கல்வியறிவுடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்ந்தால், இந்தியா உண்மையான முன்னேறத்தை அடையும்.


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!

news

வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!

news

கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!

news

நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்