புகை பிடிப்பதை நிறுத்துவோமா.. எப்படி நிறுத்தணும் தெரியுமா.. வாங்க பார்க்கலாம்!

Su.tha Arivalagan
Mar 09, 2026,04:35 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)


புகை பிடிப்பதை நிறுத்துவோமா?


எப்படி நிறுத்துவது என்று சந்தேகமா? வாங்க தெரிந்து கொள்வோம்.


தேசிய புகை பிடிப்பதை நிறுத்தும் நாள் (National No Smoking Day)  இன்று அனுசரிக்கப்படுகிறது.


தேசிய புகை பிடிப்பதை நிறுத்தும் நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

புகைபிடிப்பின் தீமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது .


புகைபிடிப்பது மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 

இது நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளை பாதிக்கிறது.அதைவிட கொடியதாக புற்றுநோய் ஏற்படும் என்பதை உணர்ந்து புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் .


புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். இதை இரண்டாம் நிலை புகைபிடித்தல் என்று கூறப்படுகிறது. புகைபிடிப்பதை நிறுத்தினால் உடல்நலம் நன்றாக இருப்பதோடு வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.




இளைஞர்கள் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரும் நண்பர்களும்  அவர்களுக்கு ஆதரவு  அளிக்க வேண்டும். மருத்தவர்கள் புகைபிடிப்பை நிறுத்த ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.  இந்த நாள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


பொதுமக்களாகிய நாம் சாலை அல்லது பொது இடங்களில் இளைஞர்கள் புகைப்பிடிப்பதை பார்த்தால் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க முயற்சி செய்யலாம். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல் ஒவ்வொரு மக்களும் அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை மாற்ற முயற்சி செய்வோம்.




சிகரெட்,புகையிலை போன்ற பொருட்களை பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் விற்பதற்கு தடை உள்ளது. அதனை மீறி தெரியாமல் யாராவது விற்றால் நாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது என்பதை உணர வேண்டும்.


பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புகை பிடிப்பதை ஆசிரியர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் . தற்பொழுது பள்ளி மாணவர்களும் புகை பிடிப்பது மனதிற்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது . புகையில்லாத மாநிலமாக மாற்ற முயற்சி செய்வோம். ஒவ்வொரு பொது மக்களின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டால் இந்நிலை மாற வழிவகை இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


புகைபிடிப்பதை கைவிட்டால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.  இந்நாளில் மக்கள் புகைபிடிப்பதை நிறுத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவற்றைக் கட்டாயம் வாழ்வில் பின்பற்றுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)