நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!

Su.tha Arivalagan
Dec 09, 2025,09:59 AM IST
- சுமதி சிவக்குமார்

திருப்பதி லட்டு சாப்பிட்டிருப்பீங்க.. நவதானிய லட்டு சாப்பிட்டிருக்கீங்களா.. சத்தானது, சுவையானதும் கூட. குறிப்பாக பெண்களுக்கு இது அவசியமானதும் கூட.

சத்துள்ள நவதானிய லட்டு என் அம்மா அடிக்கடி செய்து கொடுத்தது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் ஊட்டச்சத்து நிறையும். ரத்தம் ஊரும். செய்முறை பார்க்கலாம் வாருங்கள்.



தேவையான பொருட்கள்

கேழ்வரகு 1/4 கி
கம்பு  1/4 கி
கோதுமை 1/4 கி
பச்சை பயறு 1/4 கி
கொள்ளு 1/4 கி
எள்ளு 1/4 கி
வேர்க்கடலை 1/4 கி
கருப்பு உளுந்து 1/4 கி
பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி 1/4 கி
நாட்டுச் சர்க்கரை 1 கி
நெய் 1/4 லி
ஏலக்காய் 20 ரூ
முந்திரி 100 கிராம் 

செய்முறை

மேற்கண்ட தானியங்களை தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும். ஏலக்காய் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இடித்து கொள்ளவும்.

முந்திரியை கிள்ளி நெய்யில் வறுத்து கொள்ளவும். வறுத்த அனைத்து தானியங்களையும் ஆற வைத்து மிசினில் கொடுத்து முறுக்கு மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும்.

அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் கொட்டி நாட்டுச் சர்க்கரை, பொடித்த ஏலக்காய், வறுத்த முந்திரி மற்றும் நெய் சேர்த்து கிளறி லட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

இரண்டு நாட்களில் சாப்பிடுவதாக இருந்தால் சிறிது காய்ச்சிய பால் கலந்து லட்டு உருண்டை பிடிக்கலாம். பார்க்க ரவா லட்டு போல் இருந்தாலும் சாப்பிட வித்தியாசமான ருசியோடு இருக்கும்.

( குறிப்பு என்னை என் கணவர் பெண் பார்க்க வரும் போது இந்த லட்டு தான் சாப்பிட கொடுத்தேன்!)

படம் உதவி: Taste Amazing/Youtube Channel

(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)