- ஸ்வர்ணலட்சுமி
குயினோவா .. ஆங்கிலத்தில் இதன் பெயரை கீன்வா (Quinoa) என்று உச்சரிக்க வேண்டும்.. இதை தமிழில் சீமை திணை என்று அழைக்கப்படும் இது ஒரு வகை தானியம். இதனை தானியங்களைப் போலவே சமைக்கலாம். அரிசி பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்கிறதா ?.. அதற்கு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய கீன்வா பொங்கல் சட்டென குக்கரில் ஈசியாக செய்யக்கூடிய ரெசிபி. எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.. வாருங்கள்... கிச்சனுக்குள் போகலாம்...
தேவையான பொருட்கள்
1. குயினோ வா அரிசி (Quinoa) ஒரு கப்
2. பாசிப்பருப்பு ஒரு கப்
3 .சீரகம், மிளகு தலா ஒரு ஸ்பூன்
4.இஞ்சி பொடியாக கட் செய்தது அரை ஸ்பூன்
5. பூண்டு ஆறு பல்
6 .கருவேப்பிலை 10
7 .பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
8.நெய் இரண்டு ஸ்பூன்
9. முந்திரி பத்து பொடியாக கட் செய்யவும்
10.உப்பு தேவைக்கு ஏற்ப
இப்பொழுது இந்த பொங்கல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் ... வாங்க ஃபிரண்ட்ஸ்
செய்முறை:
குயினோவா அரிசியை நன்றாக கழுவ வேண்டும் .பிறகு பாசிப்பருப்பை கழுவி அதனுடன் சேர்க்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் கழுவிய குயினோவா அரிசி பருப்பு சேர்க்கவும் .பிறகு நான்கு கப் தண்ணீர் ஊற்றவும். குறிப்பு :எந்த கப்பில் அளவுக்கு எடுக்கிறோமோ அதே கப்பில் தண்ணீர் ஊற்றவும்.
ஒரு மணி நேரம் இவற்றை தண்ணீரில் நன்றாக ஊற வைத்தும் செய்யலாம். பிறகு குக்கரில் அரிசி பருப்பு, சீரகம், மிளகு, பொடியாக கட் செய்த இஞ்சி, கருவேப்பிலை, பூண்டு ,பெருங்காயத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூன்று நான்கு விசில் விடவும்.
குக்கரில் பிரஷர் அடங்கியதும் வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது சீரகம் சேர்த்து அதனை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கம கம வென அருமையான சுவையான ஹெல்தியான குயினோவா கீன் வா பொங்கல் ரெடி.
பயன்கள்
கீன்வா என்பது ஒரு வகை விதை .இது தானியங்களைப் போலவே பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு முழுமையான புரதம் மற்றும் நார்ச்சத்து தரும் சிறந்த உணவாகும்.
1.இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன இது ஒரு முழுமையான புரதமாக அமைகிறது
2. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது
3 .சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
4.. இரும்பு ,மெக்னீசியம், மாங்கனிசு மற்றும் துத்தநாகம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம்.
5. உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவு இது பெரும்பாலும் ஓட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
பயன்பாடுகள்:
இதனை சாதம் போல வேக வைத்து குழம்பு அல்லது பொரியலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற பொங்கலாக செய்தால் பருப்பு சாம்பார் சட்னி வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இதனை வேக வைத்து காய்கறிகள் மற்றும் கீரைகளுடன் சாலடாக சாப்பிடலாம்
சூப்புகளில் காய்கறிகள் மற்றும் ஸ்வீட் கான் சூப் உடன் இதனை வேக வைத்து சாப்பிட சத்தான உணவாக இருக்கும். இதில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் அனைத்து வயதினரும் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவாகும்.
மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கும், சுவாரசியமான தகவல்களுக்கும், தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி
ஹன்சிகா மோத்வானிக்கு என்னாச்சு.. கணவர் புகைப்படம், கல்யாண வீடியோவை நீக்கினார்!
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
{{comments.comment}}