கற்பனைக் குதிரை

Su.tha Arivalagan
Oct 09, 2026,03:42 PM IST

- கவிதை மழை அ. நவஜோதி அருண்


சூரியனை

உருக்கி

சந்திரனில்

கலக்கி


சேதாரங்கள்

விலக்கி, 

சேலையொன்று

செய்தேன்


வண்ணமேதும்

இல்லையென

வானவில்லைக்

குழைத்தேன்.




கண்மணிக்கு

கொடுத்தேன். 

இடறிவிட... 

தெளிந்தேன்