அவன் அப்படிதான்!

Oct 08, 2026,02:46 PM IST

கவிச்சுடர் ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்


ஆசை ஆசையாய் கேட்டதையெல்லாம் 

வாங்கி தரும் அவனுக்கு 


தன் ஆசை எதுவென்று சொல்ல தெரியவில்லை

சில நேரம் தன்குழந்தைகளோடு குழந்தையாய் அவனும்


அவர்களை கண்டிக்கும் போது 

ஒன்றுமே தெரியாதது நிற்பது 

முதலில் அவன்தான் 


என்ன செய்வது அவனும் என் பிள்ளைதானே 

அதைதானே அவனும் எதிர்பார்த்தான் 




பிள்ளைகளின் சின்ன சின்ன சேட்டைகளில் 

இவனும் சேர்ந்திடுவான் 


பிறகு ஒன்றுமே தெரியாதது போல் முழிப்பான் 

பின் என்னை பார்த்ததும் அவர்களை விட்டு 

என் சேலையை பிடித்து நின்றிருப்பான் 


ஏனென்றால் 

அவனும் என் பிள்ளைதான் 


ஆகையால்

அவன் அப்படிதான்


நினைக்க தெரிந்த மனமே 

உனக்கு மறக்க தெரியாதா 

ஏன் தெரியாது? 


நினைக்க வைத்தது நான் 

மறக்கவும் வைப்பேன் நீ நினைத்தால் .


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமோ!

எப்படி போகும்?

மனம் விட்டு சிரித்தால் தான்

நோய் விட்டு போகும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்