இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்

Su.tha Arivalagan
Sep 30, 2025,12:00 PM IST

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் என்பது வழக்கமாக நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக இருக்கும். இது ஞானத்தை வழங்கும் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் பத்து நாட்கள் விழாவாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதியை வழிபடுவதற்குரிய நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கு எப்படி வழிபட வேண்டும், என்ன மலர், நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




நவராத்திரி 9ம் நாள் வழிபாடு


அம்பிகையின் பெயர் - பரமேஸ்வரி

கோலம் - தாமரை வகை கோலம்

மலர் - தாமரை

இலை -மரிக்கொழுந்து

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்

பழம் - நாவல் பழம்

ராகம் - வசந்தா

நிறம் - வெந்தயம் நிறம்


சொல்ல வேண்டிய மந்திரம் : 


மூல மந்திரம் :

"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி 

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"


காயத்ரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே 

காமராஜாய தீமஹி 

தன்னோ தேவி பிரச்சோதயாத்"


அதோடு நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்குரிய சகலகலாவல்லி மாலையை குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் படிப்பது சிறப்பானதாகும்.