- ஸ்வர்ணலட்சுமி
சரஸ்வதி தேவி, நவராத்திரி விழாவில் முக்கிய தெய்வமாகும். கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம் சரஸ்வதி தேவி ஆவார். "சரஸ்வதி "என்கிற பெயர் சமஸ்கிருத வார்த்தையான "சரசு+ அதி" இவற்றின் கூட்டுச்சொல் ஆகும். இதன் பொருள் "சரசு" என்றால் 'நிறைய தண்ணீர்' என்றும் "அதி "என்பது 'கொண்டவள் 'என்றும் பொருள் படுகிறது. இதற்கு நிறைய நீர் கொண்டவள் என்று பொருள்.
சரஸ்வதி தேவியின் உருவகம் நான்கு கைகளை கொண்டவராகவும், வெள்ளை ஆடை உடுத்தி, வெண் தாமரையில் அமர்ந்தவராகவும், ஒரு கையில் ஜெபமாலையும் மற்றொரு கையில் ஏட்டுச்சு வடியையும் இரு கைகளில் வீணை மீட்டுபவராகவும் திகழ்கிறாள்.
நவராத்திரி பண்டிகையின் போது மூல நட்சத்திரத்தன்று சரஸ்வதி தேவி அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாள் சரஸ்வதி தேவியை பூஜிப்பது மிகவும் விசேஷமானது. சரஸ்வதி தேவிக்கு வேறு சில பெயர்களும் உண்டு. கலைமகள், வாணிதேவி, கலைவாணி, பாரதி,சாரதா, வீணாவதி, ஹம்சவாகினி,புத்தி தாத்திரி மற்றும் பிரம்மச்சாரிணி ஆகியவை அடங்கும். இதில் சரஸ்வதி என்கிற பெயரே 'பாயும் ஓடை' அல்லது 'நதி 'என பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. கலைமகள் என்பது கலைகளின் தெய்வமாக திகழ்வதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறாள். வாணி அல்லது வாணி தேவி, பாரதிஎன்பது பேச்சின் தெய்வம், ஞானத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். "வீணாவதி "என்பது வீணையை ஏந்தி இருப்பதால் இந்த பெயர் வந்தது.
" புத்தி தாத்திரி" என்பது அறிவு புத்தியை கொடுப்பவள். "சாரதா "நவராத்திரியில் அழைக்கும் பெயர். "ஹம்ச வாகினி" என்பது அன்னப்பறவையின் மீது அமர்ந்திருப்பதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறாள். "பிரம்மச்சாரிணி" என்பது சரஸ்வதியின் வேறு பெயர்களில் ஒன்று. மேலும் தூ யாள், பிராமி, சியாமளா,வரதாயினி புவனேஸ்வரி, ஞான வாகினி என்னும் பெயர்களாலும் சரஸ்வதி தேவி அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக " வசந்த பஞ்சமி" கருதப்படுகிறது.இந்த நாளில் சரஸ்வதி தேவி வழிபடுவது ஞானத்தை மேம்படுத்தும். நவராத்திரி பண்டிகையின் போது கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வழிபாட்டிற்கு உகந்தவை. சரஸ்வதி தேவி கைகளில் வைத்திருக்கும் வீணைக்கு "கச்ச பீ" என்று பெயர். இந்த வீணைக்கு ஒரு வரலாறும் இருக்கிறது. முதலில் சிவபெருமானால் பிரம்மனுக்கு இந்த வீணை அளிக்கப்பட்டு, பின் பிரம்மனால் சரஸ்வதி தேவிக்கு கொடுக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன.
கலைகளுக்கெல்லாம் அரசி சரஸ்வதி தேவி. கலைமகளும் இவளே. "கலைமகள் "என்ற சொல்லுக்கு 'கலைகளின் மகள் 'அல்லது 'கலைகளின் தெய்வம்' என்று பொருள். இவள் அனைத்து கலைகளையும், கல்வியையும், ஞானத்தையும் அருளும் தெய்வமாக திகழ்கிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாக சரஸ்வதி தேவி கருதப்படுகிறார்.சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட கல்வி, ஞானம், கலை,வாக்கு மற்றும் பகுத்தறிவு ஆகியவை அனைவருக்கும் கிட்டும். பொன்மகள்,வாணி, கலைவாணி,இயன் மகள் என்கிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.
படிக்கும் குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் ஸ்லோகங்களை கற்றுத் தந்து அன்றாடம் கூறி வர அவர்களுக்கு சிறந்த ஞானமும்,கல்வி அறிவும் கிட்டும்.
சரஸ்வதி ஸ்லோகம் :
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்தர் பவத்துமே சதா "
இதன் பொருள்: வேண்டிய வரங்களைத் தரும் விருப்பமான வடிவங்களை உடைய சரஸ்வதி தேவியே, உனக்கு நமஸ்காரம். நான் கல்வி கற்க தொடங்குகிறேன். அனைத்து செயல்களிலும் வெற்றி எனக்கு எப்போதும் உண்டாக வேண்டும். இந்த ஸ்லோகத்தை அன்றாடம் மாணவர்கள் கூறும் பொழுது அவர்களுடைய நினைவாற்றல் பெருகி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.இந்த ஸ்லோகத்தை தினமும் காலை,மாலை இருவேளையில் பாராயணம் செய்வது அதீத நன்மை பயக்கும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!
{{comments.comment}}