- ஸ்வர்ணலட்சுமி
மூன்று தேவிகள் என்பது இந்து சமயத்தில் நாம் அனைவரும் வணங்கும் லட்சுமி தேவி,பார்வதி தேவி, சரஸ்வதி தேவி ஆகியோரே குறிக்கிறது. முப்பெரும் தேவியர் திரு மூர்த்திகளுக்கு இணையான பெண் வடிவம் என்றும் அவர்கள் தனித்தனி சக்தியையும், வடிவத்தையும் கொண்டவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். நவராத்திரி விழாவில் நாம் ஒன்பது நாளும் முப்பெரும் தேவியரை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவியரை வழிபடும் முறையானது முதல் மூன்று நாட்கள் தைரியத்திற்கு அதிபதியான பார்வதி தேவியையும்,அடுத்து வரும் மூன்று நாட்கள் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியையும்,மற்றும் இறுதியான மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியை வணங்குகிறோம். இம்மூன்று தேவியரும் இணைந்து ஆதிபராசக்தி அல்லது தேவி வடிவத்தின் வெவ்வேறு அம்சங்களாக கருதப்படுகிறார்கள்.
முப்பெரும் தேவியர் :

பார்வதி (துர்க்கை):(brave ness )சக்தி, அன்பு மற்றும் அன்பின் தேவியாக கருதப்படுகிறாள்.
லக்ஷ்மி :(wealth)பொருள், செல்வம் மற்றும் வளத்தின் தேவியாக கருதப்படுகிறாள்.
சரஸ்வதி:(education ) கலை,கல்வி மற்றும் அறிவின் தேவியாக கருதப்படுகிறாள்.
பார்வதி தேவிக்கு மலைமகள்,உமையவள், இகன்மகள் என்ற வேறு பெயர்கள் உண்டு.
லட்சுமி தேவிக்கு அலைமகள்,திருமகள், மலர் மகள் என்ற வேறு பெயர்கள் உண்டு.
மேலும் ஞானத்தின் வடிவானசரஸ்வதி தேவிக்கு கலைமகள், இயன் மகள் ,சொன்மகள் என்றும் வேறு பெயர்கள் உண்டு. முப்பெரும் தேவியர் போற்றும் வகையில் '"முப்பெரும் தேவியர்" என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படமும் 1987 ஆம் ஆண்டு வெளியானது. நவராத்திரி ஒன்பது நாட்களும் மூன்று தேவியரியும் போற்றும் விதமாகவும்,வழிபாட்டின் உச்சமான இந்த பண்டிகை தீமையை அழித்து நன்மையை போற்றுவதாக அமைகிறது.
நவராத்திரி பண்டிகை சமயங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் இந்த நவராத்திரி விழாவில் துர்க்கை தேவி, நெருப்பின் அழகு,ஆவேச பார்வை வீரத்தின் தெய்வம்,இச்சா சக்தியான துர்கையை "கொற்றவை", "காளி "என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை அம்மன்.மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றிக் கொண்டாள். இவை தான்நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வெற்றியை கொண்டாடும் நாளே பத்தாம் நாளான "விஜயதசமி" நன்னாளாகும்.
முப்பெரும் தேவியர் ஒருங்கிணைந்து அருள் பாலிக்கும் ஆலயங்களில் ஒன்று சென்னை போரூர் மதனந்தபுரத்தில் உள்ளது. அங்கு ஸ்ரீ துர்க்கை,ஸ்ரீ சரஸ்வதி,ஸ்ரீ லட்சுமி தேவியர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.. தனம் தரும் திருமகள், கல்வி தரும் கலைவாணி, தளர்வறியா மனமும் தைரியமும் தரும் துர்காம்பிகை தேவியரின் தேவியரின் திருவருளே உலகில் உள்ள அனைத்து உயிர்களின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
ஒருவர் வாழ்க்கையில் முப்பெரும் தேவியரின் வரம் கிடைத்தால் போதும் சகல சௌபாக்கியங்களும், பெற்று வாழ்க்கையின் பூரணத்துவம் பெற்றுவிடலாம். உலகத்தை படைத்து காத்து அழிக்கும் சக்திகளை கொண்டவர்கள் முப்பெரும் தேவர்களான பிரம்மா விஷ்ணு சிவன் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் தான் சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி,பார்வதி தேவி ஆவார்கள். இந்த முப்பெரும் தேவியர்களின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் செல்வ செழிப்பிற்கும், கல்வி அறிவிற்கும்,வீர தைரியத்திற்கும் எந்தவித குறையும் இருக்காது. இவை அனைத்தும் ஒருசேர பெற்றவர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக கொடுத்து வைத்தவராகவே திகழப்படுவார்கள்.
பஞ்சமி திதியில் முப்பெரும் தேவியர் வழிபாடு செய்வது அதீத சிறப்பை அளிக்கும். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}