சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை
நவராத்திரி பண்டிகையின் நிறைவாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அக்டோபர் 01ம் தேதியும், விஜயதசமி அக்டோபர் 02ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல்வி, கலைகள், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் சரஸ்வதி தேவியின் அருளால் தொழில்கள் சிறப்படையும், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும், துவங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை துவக்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபடுவதற்கான நேரம் :
காலை 09.10 முதல் 10.20 வரை
காலை 10.40 முதல் 11.50 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
மாலை 6 மணிக்கு மேல்
விஜயதசமி, வித்யாரம்பம் வழிபடும் நேரம் :
காலை 07.45 முதல் 08.50 வரை
காலை 10.40 முதல் பகல் 12 வரை
மாலை 6 மணிக்கு மேல்
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்டவர்கள் விஜயதசமி வழிபாடு நிறைவடைந்ததும் சில பொம்மைகளை சாய்த்து வைத்து, சனிக்கிழமை அன்று கொலு படிகளை எடுத்து விடலாம். அகண்ட தீபம் வைத்து வழிபட்டவர்கள் விஜயதசமி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அதை குளிர செய்து விடலாம். படம் வைத்து வழிபட்டவர்களும் அன்றைய தினமே எடுத்து வைத்து விடலாம். கலசம் அமைத்து வழிபட்டவர்கள் சனிக்கிழமையில் கலசத்தை பிரித்து அதில் நீரில் வைத்து வழிபட்டிருந்தால் அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விடலாம். அரிசி வைத்து வழிபட்டிருந்தால் அந்த அரிசியை சாமிக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.