ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
சென்னை: சென்னை சங்கத்தமிழ் இலக்கியப் பூங்காவின் நிறுவனர் பாரதிச்சுடர் தமிழ்மாமணி நா. வே. நீலகண்டத் தமிழ் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதுதொடர்பாக சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா குடும்பத்தாரின் வாழ்த்துரை:
இவர்
சிந்திப்பதெல்லாம் செந்தமிழை...
உள்ளுவதெல்லாம் தமிழர் உயர்வை...
எண்ணமெல்லாம் எப்போதும் தமிழினத்தைப் பற்றியதே....
பிறரின் திறமையைக் கண்டறிந்து
ஊக்குவித்து
அவர்களுக்கு அவர்களையே தெரியவைக்கும் இவரின் செயல் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.
வள்ளுவரின்,
பாரதியின்,
பாரதிதாசனின் வழி நின்று சிறு குழந்தைகளைப் பண்படுத்தும் அரிய செயலை முன்னெடுத்துச் செய்து வரும் செயல்
வீரரவர்.
இல்லத்தரசிகளின் தமிழார்வத்தைக் குவிய நிகழ்வுகள் மூலம் வளர்த்து வருகிறார்.
இவர் ஜெர்மன் தமிழருவி இலண்டன் பி.எஸ்.எஸ்.என். அமைப்புகளுடன் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்காவை
இணைத்துப் பல்வேறு திறமைகளை உலகறியச் செய்யும் பண்பாளர். நூல்வயல் பதிப்பகம் வாயிலாகப் பல்வேறு எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
சுயநலமில்லாத தமிழ் இனப்பற்றாளர். பலரையும் ஏற்றிவிடும் ஏணி. கவிஞர்களை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தணியாத ஆர்வமிக்கவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் பட்டியலில் இவர் பெயரைக் காலம் தன்னுள் பொதித்துக் கொள்ளும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தை நேசித்து தமிழினத்தை சுவாசிக்கும் மனிதராக வாழ்ந்து வரும் எளியவர்.
அவரது திட்டங்களும் செயல்பாடுகளும் எத்தனையோ பேரின் வாழ்க்கையை உயர்த்தியுள்ளது. இலக்கிய ஆர்வத்தை மீட்டெடுத்திருக்கிறது. புதிய பாதையைக் காட்டி இருக்கிறது புகழ் ஏணியில் ஏற்றி இருக்கிறது.
இத்தகு அரும் மனிதர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை எங்கள் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா குடும்பம் வாழ்த்தியும் வணங்கியும் தெரிவித்து மகிழ்கிறது.
அவர் நல்ல உடல் நலனும் நீண்ட ஆயுளும்எல்லா வளங்களும் பெற்று மல்லிகையின் மணமாய் தேனின் இனிமையாய்
வாழ இறைவனை வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.