வேலூரில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
வேலூர்: வேலூர், கொல்லமங்களத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அதன்பின்னர் தவெக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பனை இன்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள்:
* நமது ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பில் நம்பர் 1 ஆக இருக்கும்.
* அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதல் தரத்தில் இருக்கும்.
* போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
* மாநில, மத்திய அரசு அலுவலகங்களை அணுகும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படும்.
* நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்லூரி சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப்படும்.
* மலை கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு அங்கேயே பிரசவம் பார்க்கும் வகையில் அரசு சுகாதார மையங்கள் கொண்டுவரப்படும்.
* பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
* ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், அவர்களின் குடும்பங்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.
* தென் தமிழகம் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்.
* விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டம் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கதவு பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உறுதி செய்யப்படும்.
* போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
* மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களில் சரிபாதி பெண்கள் இருக்கும் வகையில் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.