ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?

Feb 23, 2026,01:57 PM IST

வேலூர் : வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய போது வழக்கத்தை விட அதிகமான ஆவேசம், கொந்தளிப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. வழக்கமாக திமுக.,வை மட்டும் தான் கேள்விகள் கேட்பார். ஆனால் இந்த முறை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்டு, சவால் விட்டு பேசி உள்ளார் விஜய். குறிப்பாக கரூர் விவகாரம் பற்றி முதல் முறையாக விஜய் ஓப்பனாக மேடையில் பேசியது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


விஜய்யின் பேச்சு ஸ்டைல் :


திருச்சியில் கடந்த ஆண்டு விஜய் துவங்கிய பிரச்சாரம் பயணம் முதல், இன்று நடந்த வேலூர் நிகழ்ச்சி வரை மொத்தமாக தொகுத்து பார்த்தால் விஜய்யின் பேச்சில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கவனிக்க முடியும். திருச்சியில் துவங்கி, ஈரோடு வரை விஜய் கலந்து கொண்ட கூட்டங்களில் அவர் பேச்சை கவனித்தால் அதில் மத்தியில் ஆளும் பாஜக.,வை விமர்சிப்பார். திமுக அரசை விமர்சனம் செய்து, குற்றம்சாட்டுவார். அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் சிலவற்றை பட்டியலிட்டு, திமுக அரசை சில கேள்விகள் கேட்பார். சில பஞ்ச் வசனங்கள் இருக்கும். அவ்வளவு தான்.


மாறிய விஜய்யின் பேச்சு : 




ஆனால் சேலத்தில் அவர் பேசியது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல், திமுக ஆட்சியில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டி பேசினார். ஒரு முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதியை போன்று விஜய்யின் பேச்சு இருந்தது. ஆனால் இன்று வேலூரில் அவர் பேசிய பேச்சில் ஆவேசம் அதிகம் இருந்தது. குறிப்பாக தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு ஓப்பனாக பேசி பதிலளித்துள்ளார். தன்னை அசிங்கமாக பேசுவது, அவதூறு பேசுவது தமிழ்நாட்டு மக்களை அசிங்கமாக பேசுவது போலாகும் என்றார். இது சமீபத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர் விஜய் பற்றி கூறி கருத்துக்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது.


கொந்தளித்த விஜய் :


அதே போல் விஜய்யின் இன்றைய பேச்சில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று, கரூர் விவகாரம் குறித்து பேசியது. இதுவரை எங்கும் கரூர் விவகாரத்தில் தன் மீதும், தவெக மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் எங்கும் பதிலளித்தது கிடையாது. ஆனால் இன்று, "அனைவரையும் உங்களின் நண்பன் என்றால் எதற்காக கரூர் சம்பவ விவகாரத்தில் என் மீது பழி சுமத்துனீர்கள்? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு ஏன் அனுமதி தர மாட்டேங்குறீங்க?" என திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக கேள்வியை முன் வைத்துள்ளார். கரூர் சம்பவம் நடந்து நெருக்கடியான சூழலில் தவெக இருந்த போதும், கரூர் சம்பவ வழக்கில் சமீபத்தில் டில்லி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விட்டு வந்த போதும் கூட விஜய் இந்த அளவிற்கு ஆலேசமாக கேள்வி கேட்கவில்லை.


அரசியல்வாதிகளுக்கு சவால் :


அது மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கு ஊழல் தான் நண்பன். இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது எவ்வளவு சொத்து உள்ளது, அதை எப்படி சம்பாதித்தார்கள் என்பதை வெளியிட தயாரா? என சவாலும் விட்டார். திமுக மற்றும் முதல்வரை பற்றி பேசும் போது எல்லாம் விஜய்யிடம் ஆவேசம் வெளிப்பட்டதையும், அந்த சமயத்தில் சில நொடிகள் அவர் பேச்சை நிறுத்தி, தன்னுடைய கொந்தளிப்பை கட்டுப்பத்தியதையும் அப்பட்டமாக பார்க்க முடிந்தது.


விஜய்யின் ஆவேசத்திற்கு இது தான் காரணமா?




இத்தனை நாட்களாக இல்லாமல் தற்போது ஏன் விஜய் இவ்வளவு ஆவேசமாகி உள்ளார்? இதற்கு என்ன காரணம்? அப்படி என்ன தான் நடந்தது? என்ற சந்தேகம் இன்று விஜய் பேசியதை முழுவதுமாக கேட்ட அனைவரின் மனதிலும் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் வரை தவெக கூட்டணிக்கு எப்படியும் காங்கிரஸ் வந்து விடும் என விஜய் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். திமுக.,வின் மிகப் பெரிய பலமே காங்கிரஸ் கட்சி தான். அதை தங்கள் பக்கம் இழுத்து விட்டால், தங்களின் வெற்றி இன்னும் உறுதியாகி விடும் என விஜய் நம்பினாராம். அதோடு தேமுதிக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் தங்கள் கூட்டணிக்கு வந்து விடும் என அதிகம் நம்பிக் கொண்டிருந்தாராம் விஜய். ஆனால் தற்போது அனைத்து கூட்டணி கட்சிகளையும் சமாதானப்படுத்தியதுடன், கூட்டணி கட்சிகளிடையே இருக்கும் சலசப்புக்களை சரி செய்யவும், அவர்கள் கூட்டணியை விட்டு வெளியே போய் விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் 7 பேர் கொண்ட குழுவையும் திமுக அமைத்து விட்டது. 


அனைவரையும் விமர்சிக்க இது தான் காரணமா?


இதனால் தவெக கூட்டணி பலப்படும் என நம்பிக் கொண்டிருந்த விஜய்க்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. இப்போது தனித்து விடப்பட்டதை போல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறும் தனது தலைமையிலான கூட்டணியை யாரும் ஏற்க தயாராக இல்லையே. கூட்டணிகள் அனைத்தும் முடிவாகி விட்டதே என்ற ஆதங்கம் தான் விஜய்யின் இன்றைய தொந்தளிப்பிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இப்போது அனுபவம் வாய்ந்த எந்த அரசியல் கட்சியின் துணையும் இல்லாமல் தனியாக தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் தள்ளப்பட்டுள்ள நெருக்கடி சூழலை தான் அவரது பேச்சு வெளிப்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணம் பையை நிரப்பும்.. ஆனால் அன்பு மட்டுமே.. Money is not a matter for a happy life

news

மூளை யோசிப்பதற்கு முன் இதயம் எடுக்கும் முடிவு இது. .. Love without reasons is the most beautiful one

news

உலகப் புரிதல் மற்றும் அமைதி தினம்.. World Understanding and Peace Day!

news

சாதாரண நாள் கூட சிறப்பாக மாறலாம்!

news

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

news

ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?

news

Phantom கதாபாத்திரத்துக்கு வயது 90.. அதை விடுங்க.. இரும்புக் கை மாயாவி தெரியுமா?

news

தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து மக்களை சந்திப்பேன்: தவெக தலைவர் விஜய் பேச்சு!

news

பிப்ரவரி 28ம் தேதி என்ன நாள் தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்