நிறைகுடம்
க.யாஸ்மின் சிராஜூதீன்
நிறைகுடம் தளும்பாது ..
குறைகுடம் வழியாது ..
நிறைகுடம் குறையும் ...
குறைகுடம் நிரையும் ...
நிறையை கண்டு ஏங்காதே ..
குறையை நினைத்து வாடாதே ...
ஏற்ற இறக்கம் இருக்கும்தான் ...
குடத்தை நிரப்ப நீரும் இருக்குதான்...
தோண்டதோண்ட நீரும் சுரக்கும்தான்.....
கற்க கற்க அறிவும் வளரும்தான் ..
அறிவைக் கொண்டு அறிவுக்குடத்தைநிரப்பிடு....
வரங்கள் எல்லாம் இறைவனிடத்தில் இருக்குது....
அவற்றின் விலை எல்லாம் உன்னிடத்தில் இருக்குது....
முயற்சி என்ற விலையை தந்திடு ...
விரும்பிய வரத்தை பெற்று மகிழ்ந்திடு...
உந்தன் வெற்றியை நீயே வென்றிடு...!!!
தன்னம்பிக்கை என்றும் கொண்டிரு ...
நிறைகுடமாய் என்றும் இருந்திடு...!!!
திறமையை முடக்கி வைக்காதே ..
முடியாது என்ற சொல்லைச் சொல்லாதே..
அலையைப்போல முயற்சி செய் ...
நிறைகுடம் மாறும் கடலாய்தான் ..
வெற்றிகள் குவியும் அலையாய்தான்...
நிறைகுடத்திற்கு என்றும் மதிப்புதான்...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)