-க.யாஸ்மின் சிராஜூதீன்
பசுமையான பூமி இருந்தது..
கலகல என சிரித்து மகிழ்ந்தது
மரங்கள் நிறைந்த காடுகள் இருந்தன
பசுமை எங்கும் நிரம்பி வழிந்தது
சலசல என ஓடும் நீர்நிலைகள் இருந்தன...
அள்ளிப்பருக ஆசை இருந்தது
பறவை இனங்கள் மகிழ்ந்து பறந்தன
விலங்குகள் எல்லாம் காட்டில் வாழ்ந்தன...
குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர்....
குடும்பங்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்து மகிழ்ந்தன...
இயற்கையை நாமும் போற்றினோம்
இயற்கை நம்மை காத்தது...

இவையெல்லாம் இப்போ எங்கே சென்றது.....
என்று எண்ணி மலரும் நினைவுகள் ஆனது ....
பூமியோடு நாமும் ஏங்கிநிற்கிறோம்..!!
பசுமையெல்லாம் கட்டிடங்கள் ஆனது
உணவைநாடி எங்கே போவது
நீர்நிலைகள் குப்பை ஆனது
குடிக்க தண்ணீர் குடுவை ஆனது
விலங்குகள் எல்லாம் வீட்டை இழந்தன...
குழந்தைகள் எல்லாம் அலைபேசியில் விளையாடுது...
ஆரோக்கியம் எல்லாம் இழந்து நிற்குது....
குடும்பம் எல்லாம் தனிக்குடும்பம் ஆனது...
இயற்கை சீற்றம் அதிகம் ஆனது
பூமியை நாமும் காக்கனும்
குப்பைகளை பிரித்து போடனும்
பூமியை அழ விடக்கூடாது
சிரிக்கும் பூமியை மீட்டெடுப்போம்
நாம் அனைவரும் ஒன்றாய் சேர்ந்துதான்....
மாசில்லாத உலகம் படைப்போம் வாருங்கள்.....!!!
இன்பம் கிடைக்கும் பாருங்கள்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
ராகுல் காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் உற்சாக வரவேற்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்
{{comments.comment}}