பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jan 23, 2026,06:22 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சொல்லும் டபுள் என்ஜின் எனும் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அனல் பறக்கப் பேசிய அவர், தமிழ்நாட்டில் டபுள் என்ஜின் ஆட்சி மலரும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தற்போது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 



மாண்புமிகு பிரதமர் அவர்களே…

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது என்று அவர் கூறியுள்ளார்.