மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Jan 23, 2026,06:12 PM IST

செங்கல்பட்டு: திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார். அதன்பின்னர் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சில நாட்களுக்கு முன் பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது.


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.11 லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு நிதி தரப்பட்டுள்ளது. மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. திமுகவுக்கு கவுன்டவுன் துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமையும். தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது.  தமிழகத்தில் தேஜ கூட்டணி குடும்பத்தின் மூத்த தலைவர்கள் இங்கு கூடியுள்ளனர். எல்லோரும் உறுதியாக இருப்பது என்னவெனில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே.




நீங்கள் திமுகவிற்கு இருமுறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். திமுக அரசை மக்கள் சிஎம்சி அரசு என்று அழைக்கிறார்கள். CMC என்றால் Corruption Mafia Crime ஆகும். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயலாற்றினார். வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்க, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு அவசியம். ஆனால், திமுக இளைஞர்களை போதையின் கையில் ஒப்படைத்து விட்டது. பெற்றோர் கண்முன் குழந்தைகள் நாசமாகின்றனர். திமுக ஆட்சியில் போதை மாபியா செழிப்பாக உள்ளது.


நமது முருகப் பெருமானுக்கு விளக்குப்போடுவது விவாதப்பொருளாக்கப்பட்ட போது நமது தலைவர்கள் பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கு என் கரவொலி. திமுகவும், அவர்கள் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களைக்கூட அவமானப்படுத்தினார்கள். தமிழ்நாட்டின்  எதிர்காலத்தை நிர்ணயிக்க கூட்டணித் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். தமிழ்நாட்டில் எவ்வளவு ஊழல் மலிந்துள்ளது என்பது சிறு குழந்தைக்கு கூட நன்றாக தெரியும். தமிழக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் மத்திய அரசு துணையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்