2026ம் ஆண்டின் 11வது மாதம் வந்தாச்சு.. நவம்பர் மாத சிறப்புகள்!

Su.tha Arivalagan
Nov 02, 2026,03:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


2026 ஆவது ஆண்டின் 11வது மாதமான நவம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷமான பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்கள் இருக்கு தெரியுமா? 


கிரெகோரியன்  நாட்காட்டியில் 11 வது மாதமான நவம்பர் மாதம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறந்துள்ளது. இந்த மாதம் 30 நாட்களைக் கொண்ட கடைசி மாதமாகும். நவம்பர் மாதத்தில் வரும் விசேஷமான விரத நாட்கள் மற்றும் சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்கள் இதோ..


பெயர்க்காரணம் :


இலத்தின் மொழியில் நவம் (Novem) என்றால் 9 என்று பொருள். பண்டைய ரோமானிய நாட்காட்டியின் படி மார்ச் மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டதால் இந்த மாதம் ஒன்பதாவது மாதமாக இருந்தது. பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்ட பிறகு பழைய பெயரே "நவம்பர்" என  இந்த மாதத்திற்கு நிலைத்து விட்டது.


தமிழ் மாதங்களான  ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் நவம்பர் மாதம் வருகிறது. இந்த மாதத்தில் அனைவரும் ஆவலாக எதிர்நோக்கும் தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், சபரிமலை யாத்திரை என பல சிறப்பான நிகழ்வுகள் நிறைந்துள்ளது.


விசேஷமான& விரத நாட்கள் :




நவம்பர் 1 : மொழிவாரி மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தமிழ் பேசும் பகுதிகள் பிரிந்து தனி மாநிலமாக "தமிழ்நாடு "உருவான தினம். 'தமிழ்நாடு தினம்'.


நவம்பர் 2: நவமி திதி.


நவம்பர் 3: தசமி திதி.


நவம்பர் 5 :ஏகாதசி விரதம். 


நவம்பர் 6 :லட்சுமி குபேர பூஜை செய்யும் தன் தேராஸ் தினம். பிரதோஷம்.


நவம்பர் 7: மாத சிவராத்திரி. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு நாள்.


நவம்பர் 8 :தீபாவளி பண்டிகை. மதியம் 12 :00மணி முதல் அமாவாசை ஆரம்பம்.


நவம்பர் 10 : சகல சுப்பிரமணிய ஸ்தலங்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம். கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.

உலக அறிவியல் தினம் மற்றும் உலக தடுப்பூசி தினம்.


நவம்பர் 12:  உலக நிமோனியா தினம்.


நவம்பர் 14: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் .தேசிய "குழந்தைகள் தினம்" மற்றும் உலக நீரிழிவு தினம்.


நவம்பர் 15 : சஷ்டி விரதம். கந்த சஷ்டி சூரசம்ஹாரம். சகல சுப்பிரமணிய ஸ்தலங்களில் சூரசம்ஹார விழா.


நவம்பர் 16: முருகப்பெருமான் திருக்கல்யாணம்.


நவம்பர் 17: கார்த்திகை முதல் தேதி. ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை அணியும் விழா.

 

நவம்பர் 19: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பிறந்த நாள்.

 

நவம்பர் 20 :ஏகாதசி விரதம்.

 

நவம்பர் 21: உலக தொலைக்காட்சி தினம்.

 

நவம்பர் 23 :புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள். 


நவம்பர் 24 :பௌர்ணமி. திருக்கார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபம்.


நவம்பர் 27: சங்கடஹர சதுர்த்தி.


சுப முகூர்த்த நாட்கள் :


நவம்பர் 1, 11, 13, 15, 16, 20 29 (வளர்பிறை முகூர்த்தம் ).


கரி நாட்கள் நவம்பர் 6, 17, 23, 26 ( சுப காரியங்கள்  கரி நாட்களில் தவிர்ப்பது சிறப்பு).


அரசு விடுமுறை: தீபாவளி பண்டிகை மறுநாள் நவம்பர் 9.


தென்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.