ஐப்பசி மாத சிறப்புகள்.. விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள்

Oct 19, 2026,08:13 AM IST

- ஸ்வர்ணலட்சுமி

 

பராபவ வருடம் 2026 அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஐப்பசி மாதம் முதல் நாள் பிறந்துள்ளது. தமிழ் வருடத்தின் ஏழாவது மாதமான ஐப்பசி மாதம் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஐப்பசி மாதம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கேட்ட வரங்களையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய மாதமாக முதல் நாள் துர்க்காஷ்டமி, அடுத்த நாள்  சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, அடுத்து விஜயதசமி என்று நவராத்திரி விழாவுடன் ஆரம்பித்துள்ளது.


ஐப்பசி மாதம் திருமாலுக்கு உகந்த மாதம் ஆகும்.  வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி வழிபாடு செய்வது செல்வ வளத்தை பெருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலையில் வீட்டில் ஆறு நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட குறையாத செல்வம் சேரும்,கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.


கந்த சஷ்டி விரதம் :


முருகப்பெருமான்  சூரபத்மனை  வதம் செய்து தேவர்களை காப்பாற்றிய நிகழ்வை நினைவு கூறும் வகையில் கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.


சிவனுக்கு அன்னாபிஷேகம் :


ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவலிங்கத்திற்கு சாதம், காய்கறிகள், மற்றும் பழங்களைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெறும்.இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.




தீபாவளி பண்டிகை:


உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடும் இருளை நீக்கி ஒளியை ஏற்றும் பண்டிகையான தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


துலாஸ்நானம் காவிரியில் நீராடல் :


இந்த ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். இம்மாதம் முழுவதும் அல்லது கடைசி நாளில் கடை  முழுக்கு  அல்லது கடைமுகம் அன்று காவிரியில் நீராடுவது அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும்.


காவிரியில் நீராடி பெருமாளை தரிசிக்க நம் வீட்டில் தனம்,தான்யம் பெருகும். கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.பிறவி கடனையும் தீர்க்கும். புண்ணியம் சேரும்.




குடும்பத்தில் மன நிம்மதி பெருகும். ஐப்பசி மாதம் வரும் விசேஷ மற்றும் விரத நாட்களை பற்றி  பார்ப்போம்..


ஐப்பசி 2 திங்கள்- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.

ஐப்பசி 3  செவ்வாய்- விஜயதசமி.

ஐப்பசி 5 வியாழன்- ஏகாதசி விரதம்.

ஐப்பசி 6 வெள்ளி பிரதோஷம்.

ஐப்பசி 8  ஞாயிறு- பௌர்ணமி. சுபமுகூர்த்தம்.

ஐப்பசி 10  செவ்வாய் கிருத்திகை விரதம்.

ஐப்பசி 11 புதன் வாஸ்து நாள்.

ஐப்பசி 12 வியாழன் சங்கடஹர சதுர்த்தி.

ஐப்பசி 13 வெள்ளி சுபமுகூர்த்தம்.

ஐப்பசி  14 சனி சஷ்டி விரதம்.

ஐப்பசி 15 ஞாயிறு அஷ்டமி திதி.

ஐப்பசி 16 திங்கள் நவமி திதி.

ஐப்பசி 17 செவ்வாய் தசமி திதி.

ஐப்பசி 19 வியாழன் ஏகாதசி.

ஐப்பசி 20 வெள்ளி பிரதோஷம் .

ஐப்பசி 21 சனி மாத சிவராத்திரி.

ஐப்பசி 22  ஞாயிறு தீபாவளி பண்டிகை, அமாவாசை.

ஐப்பசி 24 செவ்வாய் கந்த சஷ்டி ஆரம்பம்.

ஐப்பசி 29 ஞாயிறு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா.

ஐப்பசி 30 திங்கள் அஷ்டமி திதி.


அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை உள்ள ஐப்பசி மாதம் முழுவதும் எல்லாம் வல்ல இறைவன் அருள் ஆசியுடன், அனைவர் வாழ்விலும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. 


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்