சிறந்து விளங்கும் சிகரமாகப் பூக்கள்

Su.tha Arivalagan
Jul 21, 2026,02:29 PM IST

- பி.எஸ்.முருகேசன்


சிரிக்கும் மலர்கள் 

சிறகுகள் விரிக்கும்


மங்கையின் கூந்தலில் 

மணம் தந்து ஜொலிக்கும்


காற்றினிலே வாசம் 

கலந்து தெளிக்கும்


உதிர்ந்தாலும் வாசம் 

உண்டு என உரைக்கும்




கடந்து செல்லாமல் 

கவர்ந்து இழுக்கும்


சிறந்து விளங்கும் 

சிகரமாகப் பூக்கள்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)