ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
- ப.வினு
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா...
என் மேஜை மேல் நோட்டும் பேனாவும் ஓய்வெடுக்க
என் பாக்கெட்டிலோ உனது போட்டோ ஒட்டிக் கொண்டிருக்கிறது!
இந்த உலகத்தின் மிக அழகான மிக ஆபத்தான ஆயுதம் எதுவென்றால்
அது உன் இரண்டு கண்கள் தான்டி!
கூர்மையான வேலும் வாளும் கூட
உன் புருவ நெரிப்புக்கு முன்னால் தோற்றுப் போய்விடும்
நீ கோபமாய் ஒரு முறை முறைத்துப் பார்த்தால் போதும்
என் காதல் நெஞ்சில் பாயும் அம்புகள் பத்தாயிரம்!
ஆயுத பூஜை என்பதால்
உன் அந்த மிரட்டலான பார்வைகளையெல்லாம்
மனசுக்குள் சந்தனமும் குங்குமமும் வைத்துப் பூஜித்து விட்டேன்!
எங்காவது வெடிகுண்டு வைத்திருந்தால் கூடக் கண்டுபிடித்து விடலாம்
ஆனால் உன் மௌனத்தில் இருக்கும் வெடிகுண்டை எங்கு போய்க் கண்டுபிடிப்பது?
நீ வாசிக்கும் இந்தக் கவிதையே
இன்று உனக்கான பூக்களின் அர்ச்சனை!
உன் கோபக் கண்களுக்கு முன்னால் மாட்டிக் கொண்டு முழிக்கும்
இந்த ஆண்டுக்கான காதல் வீரர் விருது வழங்கப்பட வேண்டும்!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு. கார் ஓட்டுநர். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)