ஒற்றைக்கால் கொலுசு

Su.tha Arivalagan
Jul 17, 2026,10:50 AM IST

- ப.வினு


மாலை நேரம்

வீட்டின் கதவு அறை திறந்திருந்தது

அவள் பெயர் ஸாரா


அந்த வீட்டில் இருந்தது அவளது சிரிப்பின் ஒலி மட்டும் தான்

ஆனால் அந்த நாள் அமைதி

படுக்கையறைக்குள் சென்ற போது

தலையணை நனைந்திருந்தது


அது வியர்வை இல்லை

கண்ணீர்

அருகில் தரையில்

ஒரு ஒற்றைக்கால் கொலுசு

மற்றொரு கொலுசு எங்கே


அலமாரி திறந்திருந்தது

ஆடைகள் அசையாமல் இருந்தன

போன் சார்ஜரில்

பை மேசையில்




வெளியே போக நினைத்தவள் போல இல்லை

போய் விட வேண்டியவள் போல இருந்தாள்

சமையலறையில் அடுப்பில் பாதி வேகிய தேநீர்

கண்ணாடியில் அவள் விரலால் இழுத்த ஒரு கோடு


அது ஒரு வார்த்தை இல்லை

ஒரு மனநிலை

அடுத்த நாள் குளத்தருகே

மற்றொரு கொலுசு கிடைத்தது

அதன் அருகில் காலடிகள் இல்லை


நந்தினி எங்கும் கிடைக்கவில்லை

ஆனால் அந்த வீடு சொல்லியது

தலையணை சொன்னது

அவள் பல நாட்களாக அழுததாக


ஒற்றைக்கால் கொலுசு சொன்னது

அவள் ஓடவில்லை

மெதுவாக நடந்தே சென்றதாக

அடுப்பு சொன்னது

அவள் திரும்பி வர நினைத்ததாக

கண்ணாடி சொன்னது

அவள் தன்னையே கடைசியாக பார்த்ததாக


குளம் மட்டும் அமைதியாக இருந்தது

ஊரார் சொன்னார்கள்

காணாமல் போனாள்

ஆனால் அந்த வீட்டின் சுவர்கள் சொன்னது

அவள் காணாமல் போகவில்லை

மெதுவாக

நாள்தோறும்

யாருக்கும் தெரியாமல்

இறந்து கொண்டிருந்தாள்


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)