- பாவலர் மாயோன் மங்கை
காட்டிலும் மேட்டிலும்
வளர்ந்தவன்
கல்லிலும் முள்ளிலும்
நடந்த வன்
வெயிலிலே மெய்யாலே
உழைத்தவன்
வேர்வைமட்டும் உப்பாக்கி உண்டவன்

தாய்மொழி தவறாது
உரைப்பவன்
தவறியும் வேறுமோழி
தடவாதவன்
காடுண்டு கலப்பை
உண்டு
கண் உறங்க நிலம்
உண்டு
போர்த்த இரு கை கொண்டு
போலி இல்லா வாழ்வு
உண்டு
எதற்கும் ஆசை இல்லை
ஏறெடுததும் பார்ப் பதில்லை
ஓர்நாளிலே ஓரவிழிப்
பார்வையிலே
குவியிதழ் சிந்தும் முத்துத் துளியிலே
முனகவிட்ட முல்லைச்
சரமே
வேர்வை மணம் பிடிக்குமா
வேறுபக்கம் முகம்
திரும்புமா
திரும்பத் திரும்ப என்னைக் கேட்கிறனே
திருவாய் திறந்திடடி
தேக்குமரத் தேகத்திலே
தேர்மேல்மீது நீ இருக்க
தெக்கத்திக் கள்ளனுக்கு
தெவிட்டாத தேன் கிடைக்க
தென்னைமரத் தோப்பிலே தேவ ராகம்
பாடுகிறேன்
இரும்பைக் கூழாக்கிய
இளந் தென்றலே
பதில் சொல்லேன்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}