சென்னை: செங்கல்பட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி இரா. கலைச்செல்விக்கு பேராசிரியர் அய்க்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காரைக்குடி புத்தகத் திருவிழா குழு சார்பில் மாநில அளவிலான 24 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா 12 .7. 2026 அன்று நிறைவு பெற்றது. சுமார் 50 அரங்குகளில் பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.

புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ் .மாங்குடி ,வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் , எழுத்தாளர்கள் துரை. அறிவழகன் ,கா. மோகன் ஆகியோருக்கு பேராசிரியர் அயக்கண் இலக்கிய விருதும் வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழா குழு உறுப்பினர் அருணா தேவி அய்க்கண் வாழ்த்துரை வழங்கினார்.
காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் மாநில அளவில் நடத்தப்பட்ட பேராசிரியர் அயக்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டிக்கு ஏறத்தாழ 150 சிறுகதைகள் வரப் பெற்றதில் , எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு , முதலிடம் கிடைத்துள்ளது.
முதல் பரிசு பெற்ற இரா. கலைச்செல்விக்கு முன்னாள் எம்எல்ஏ எஸ் .மாங்குடி அவர்களால் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இரா. கலைச்செல்வி எழுதிய திருநங்கை பற்றிய "அவளுக்குள் அவள்" என்ற சிறுகதை புத்தகத் திருவிழா குழுவினரால் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் மணப்பாறையை சேர்ந்த அறிவுச்செல்வனுக்கு இரண்டாம் பரிசும், சமயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
இலக்கிய உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் எழுத்தாளர் இரா. கலைச்செல்வி காரைக்குடி புத்தகத் திருவிழா குழுவினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான பேராசிரியர் அய்க்கண் - வசந்தா நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}