- செ.சாந்தி சின்னத்தம்பி
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பாதையில் உன்
காலடி கேட்குமென்று...
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதில் மணியோசை
வீழுமென்று...

சகித்திருந்தேன் சகித்திருந்தேன்
சங்கடம் எல்லாம்
தீருமென்று...
நினைத்திருந்தேன் நினைத்திருந்தேன்
நிதமும் நினைவுகள்
தொடருமென்று....
தனித்திருந்தேன் தனித்திருந்தேன்
தனிமையே தண்டனையாய் மாறுமென்று...
தளர்ந்திருந்தேன் தளர்ந்திருந்தேன்
தங்கமகன் வரவினி
வாராதென்று....
மரித்திருந்தேன் மரித்திருந்தேன்
மனதளவில் சோர்வு
வந்ததென்று....
நொந்திருந்தேன் நொந்திருந்தேன்
நொடிகளும் நகராக் காலமென்று....
நம்புகின்றேன் நம்புகின்றேன்
நல்லதொரு செய்தி
வருமென்று....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}