- புலவர் சுதந்திரக்கவி ப. ஈஸ்வரநாதன்
காலையில் பிறக்கிறேன்
மாலையில் இறக்கிறேன்
கலர் கலராய் பூக்கிறேன்
வாசமாய் வாழ்கிறேன்
தென்றல் தாலாட்ட
ஆடியே மகிழ்கிறேன்

சூறாவளி காற்றில்
சுழன்றும் போகிறேன்
மலர்களின் அரசியாய்
மகுடமாய் வருகிறேன்
முட்கள் சூழ்ந்த போதும்
சிரித்து மகிழ்கிறேன்
ஒரு நாள் வாழ்விலும்
மகிழ்ந்தே மலர்கிறேன்
கனத்த இதயத்தோடு
கல்லறையிலும் இருக்கிறேன்
கோவில் கருவறையிலும்
வலம் வருகிறேன்
எந்த நிலையிலும் துன்பம் துறக்கிறேன்
எல்லாம் மாயைதான் நிச்சயமற்ற வாழ்வில்!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}