- டிலாணி ஸ்ரீதரன்
ஆதவனை அல்லலின் மறைவில் நிறுத்தி,
அதிகாலையில் சுறுசுறுப்பை பொன் நகையாக உடுத்தி,
கடல் மாதாவிடம் வேண்டுதலை புகுத்தி,
கட்டு மரத்தை ஆழிக்குள் செலுத்தி,
கவனத்தை வழிநடத்தும் துடுப்பில் இறுத்தி,
உயிரை பணயமாக்கி புறப்படுவார்கள் நெஞ்சுயர்த்தி,

எதிர்பார்ப்புகளை ஏக்கமாக உள்ளத்தில் கடத்தி,
உணர்வுகளும் உறையும் உப்பாக விழியுறுத்தி,
உலகத்திற்காகவும் உணவுக்காகவும் உயிருக்காகவும்
உடல் வருத்தி,
வலையை வீசுவார்கள்
வங்கத்தில் உட்புகுத்தி,
கனமழை காற்று வேண்டாமென வலியுறுத்தி,
விண்ணுலக தேவனை இறைஞ்சுவார்கள் கையை வானுயர்த்தி,
உடைமைகளை பறிக்காதேயென
துள்ளுமலையும்
வேகத்தை
விரைவுப்படுத்தி,
என்ன செய்வது கரை சேர்க்க வேண்டும் தேகத்தை வலுவாக்கி,
உலை கொதிக்க
உயிர் பிழைக்க
குடும்பத்தை
நினைவுப்படுத்தி,
காதலும் பாசமும் கரைகிறது தண்ணீரில் கதையடுக்கி,
பலமணி நேரம் போராடி
மனதை திடமாக்கி,
பஞ்சபூதத்திலிருந்து விடுதலை பெறுவோம் இலக்கை பலமாக்கி,
எங்கள் உயிரை வாழ்விற்காகவும்
குடும்பத்திற்காகவும் இரவலாக்கி,
நடைபயிலுகின்றோம் சமூகத்தில் நடை பிணமாகி,
உப்பு காற்றுடன்
உலாவரும் உணர்வுகளை உரைத்தேன் நானும் வரிகளாக்கி,
உணர்ந்து பாருங்கள்
வேதனையின் வலியை
மனிதனாகி.....!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}