- சசிகலா விஸ்வநாதன்
ஸ்டெல்லா மேற்படிப்பாக டீச்சர்ஸ் ட்ரெயினிங் படிக்க விரும்புவது ஜோன்ஸுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பெண் கல்விக்கு அவர் எதிரி அல்ல. ஒரு பட்டப் படிப்பு படித்தாகி விட்டது. சிறு வயது கூட்டாளி சூசை மகன் தாமஸ் பொறியியல் படித்து சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான்.
அவன் அம்மா எலிசபெத் தும் ஜோன்ஸுக்கு பள்ளி தோழிதான். இரு குடும்பத்தாரும் ஒருத்தரை ஒருத்தர் நன்கு அறிந்து புரிந்துள்ளனர். திருமணப் பேச்சை எடுக்கும் எண்ணத்தில் இருக்கும்போது "இவள் மேற்படிப்பு படிக்கிறேன்" என்று சொல்கிறாளே என்ற கவலை அவரை வாட்டியது.

மனைவி அன்னாளிடம் சொல்லி அங்கலாய்த்தார்." "என்னங்க இப்படி இருக்கீங்க? டீச்சர் ட்ரெயினிங் எடுத்தால் நல்ல அரச வேலை கிடைக்கும். நாளை பிள்ளைங்களுக்கு அது ரொம்ப உபயோகமாக இருக்கும். இரண்டு வருஷம் போற போக்குல நிமிஷமா பறந்து போகும். நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க" என்று வலியுறுத்த, அரை மனதுடன் சம்மதித்தார்.
ஸ்டெல்லா வும் முனைப்புடன் நன்கு படித்து தேர்ச்சி பெற, மதுரையிலேயே அரசு சார்ந்த கிறித்தவ பள்ளியில் வேலையும் கிடைத்தது.
இப்போதெல்லாம் ஸ்டெல்லா ஞாயிற்றுக்கிழமை சர்ச் ப்ரார்த்தனைக்குப் போவதும், நற்போதனை வகுப்பையும் தவற விடுவதே இல்லை. இறையியல் கல்லூரியிலும் பகுதி நேரமாக ஏதேதோ பணிகள் செய்து வருகிறாள் என்பது அவள் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்வு. ... நேற்றுவரை.
இன்று காலையில், ஸ்டெல்லா வுடன் வந்து, இறையியல் கல்லூரியின் முதல்வர், புனித தந்தை செபாஸ்டியன் அவர் இல்லம் வந்து" மகனே! உன் மகள் ஸ்டெல்லா, கன்னிகாஸ்திரி ஆகி கிறிஸ்துவுக்கு ஊழியம் பார்க்க சித்தமாயுள்ளாள். அவளுக்கு நீ அமைதியையும் அனுமதியும் நல்லாசிகளும் கொடு" என்று சொன்னதைக் கேட்கும் வரைதான். மகள் மேல் படிப்பு படித்து பள்ளியில் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தவர்கள் ,தரையில் தலை சுற்றி மயங்கி விழுந்தார்கள்; ஜோன்ஸும் அன்னாளும் செய்வதறியாமல் , திகைத்து தலையில் கை வைத்து சோர்ந்து அமர்ந்து விட்டார்கள்.
இப்போதெல்லாம் அவர்கள் ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனைக்குப் போவது வெகுவாய் குறைந்து விட்டது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}