- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
மகளிர் தினம்.
அன்று தர்ஷன் மீது எனக்கு ஒரு கோபம் இருந்தது. அவனைத் திருத்த வேண்டி பொய்க்கோபம். அவனைப் பார்க்காமல், அவனிடம் பேசாமல் இருந்தேன்.
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன். வச்சுக்கோங்க... வச்சுக்கோங்க.... என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
நானும் அவன் சொல்லும் போதெல்லாம் எங்கு வைத்திருக்கிறான் என்று கண்களால் தேடினேன். எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
11 மணி போல் பூவ வச்சுக்கோங்க Miss என்றான். வேறு வழியில்லாமல் எங்கடா இருக்கு பூ என்று கேட்டேன். ஒரு டம்ளர் நிறைய செம்பருத்திப் பூக்கள் மேசை மீது இருந்தன,

அதைக் காண்பித்து, இதோ Miss உங்களுக்கு தான் என்றான். டேய் இத எப்படிடா தலையில் வைப்பது (மனதிற்குள் சொல்லிக்கொண்டே), எனக்காக தான எடுத்து வந்த, என் கையில் கொடு என்றதும் குஷியாகி என் கையில் கொடுத்தான்.
இதை விட வேறு என்ன பரிசு யார் கொடுத்து விட முடியும். பொய்க்கோபம் போன இடம் தெரியவில்லை...
கள்ளங்கபடமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் உலகத்தின் தேவதைகள் தான் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.
அட்டகாசம் தொடரும்.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}