Paavalar Maayon Mangai Poem: வழிகிறதே வழிகிறதே!

Su.tha Arivalagan
May 18, 2026,10:45 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


விழிகளிலே உன்  விழிகளிலே

புதுப்புதுக்  கனவுகள்  நான்

தந்தேன்


வழிகிறதே  வழிகிறதே

துடைத்திடக்  கரங்கள்

நான் தரவா


விழுகிறதே  விழுகிறதே

கவித்துளி சிறகை

விரிக்கிறதே


தொடுகிறதே தொடுகிறதே 

நினைவுகள்  கனவுகள்

நெஞ்சினிலே


மலர்கிறதே மலர்கிறதே

தோட்டத்துப் பூக்களும்

மனதினிலே




கொதிக்கிறதே அனலடிக்கிறதே 

மார்கழிப் பனியிலும் 

தேகமுமே


தழுவிடுதே தழுவிடுதே

தளிர்க்கொடி அழகி உன்

நினைப்பே


பதிகிறதே  பதிகிறதே

இதழுடன் இதழாக

இணைகிறதே


சொருகிடுதே சொருகிடுதே

விழிகள் இரண்டும் 

சுகமாக


மருகுதடி மருகுதடி

மருதாணிப்பூவே 

உனைப் பறிக்க 


சிந்திடடி சிந்திடடி சிந்தை

சிதையாமல்

ஓர்  சொல்லே!