- பா. பானுமதி
மனைவி என்பவள் இஸ்ரோ விஞ்ஞானியா
எது வாங்கி வந்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவளா
காய்கறி வாங்கி வந்தால் கண்ணை திறந்து வாங்க முடியாதா
கீரை வாங்கி வந்தால் பூச்சி தொல்லை
பால் என்றாலும் பார்த்து வாங்குவது இல்லையா பழையது
அல்வா வாங்கி வந்தாலும் அந்த கடை தவிர வேற கடை இல்லையா
பூ வாங்கி வந்தாலும் விலை ரொம்ப அதிகம்
எண்ணெய் வாங்கி வந்தாலும் நல் எண்ணெய் தானா
நொறுக்கு தீனி என்றால் சுருக்குனே இல்லையே
கோவிலுக்கு கூட்டிப் போனால் வேகமாக நடக்க தெரியாதோ
மாலுக்கு கூட்டிப் போனால் மெதுவாக நடக்க முடியாதோ

புடவை வாங்கி வந்தால் புதுசு மாதிரியே இல்லையே
பஜ்ஜி வாங்கி வந்தாலும் பழைய மாவு போல
வடை வாங்கி வந்தால் வாயில் வைக்க முடியல உப்பு அதிகம்
எது செய்தாலும் சரி இல்லை சரி நீயே போய் வாங்கிக்கொள் என்றாள்
ஒரு வேலை செய்ய தெரியாது இப்படியே வளர்ந்தாச்சு
ஒரு நாள் வியப்பாக இருக்கட்டுமே என்று ஒரு நகை வாங்கி வந்தேன்
திருமண நாளா பிறந்தநாளா தெரியவில்லை மறதி
மகிழ்ச்சியுடன் இருந்தாள் பொன் என்றதும் புன்னகைக்க செய்தாள்
இது எப்படி நிகழ்ந்தது இயற்பியல் மாற்றமா வேதியியல் மாற்றமா
உயிருக்குள் உண்டாகும் பொன்னின் மாற்றமா பெண்ணில் மாற்றம் எப்படி
விடை தெரிந்தவர்கள் விளக்கலாமே!!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
{{comments.comment}}