சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாகவும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தவெக.,வில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரியில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்கள், எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான போக்கையும் அவரது அரசியல் நகர்வுகளையும் கடுமையாக விமர்சித்தனர்.
கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் இபிஎஸ் :
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி அரசியல் கட்சி நடத்தவில்லை, மாறாக ஒரு கார்ப்பரேட் கம்பெனியை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஜாலியாக காலம் கழிக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) வருபவர்களை துரோகிகள் என்று விமர்சிப்பது வேடிக்கையானது. உண்மையான துரோகம் எங்கே நடைபெற்றது என்பதை அதிமுக தொண்டர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்றார்.

மேலும், "‘தீய சக்தி’ என்று ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்ட திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி திரைமறைவில் முயற்சி செய்தார். இந்த காரணத்தாலேயே கட்சியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே, இபிஎஸ்-யிடம் தற்போதும் நீடித்து இருப்பவர்கள் தான் உண்மையான துரோகம் செய்தவர்கள். தவெக-விற்கு வந்துள்ளவர்கள் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள். தமிழகத்தின் எதிர்காலம் தவெக-வில் தான் உள்ளது" என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விஜயபாஸ்கரின் பரபரப்பு குற்றச்சாட்டு:
அவரைத் தொடர்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர், "தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க வேண்டும் என்று நாங்கள் இபிஎஸ்-யிடம் வலியுறுத்தினோம். தேர்தல் முடிந்த பிறகும், தவெக அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே கூறினோம். ஆனால், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி செவிமடுத்துக் கேட்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "தீய சக்தியான திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இபிஎஸ்-ஸின் தவறான முடிவுகளே கட்சி இந்த நிலைக்குச் செல்லக் காரணம்" என்று அவர் சாடினார். அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் திரைமறைவு உடன்பாடு வைக்க முயன்றார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டி, தவெக-வை நோக்கி நகர்ந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்விற்கான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
{{comments.comment}}