கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

Jul 02, 2026,04:32 PM IST

சென்னை : தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். த.வெ.க-வில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கரூர் சம்பவத்தை முன்னிறுத்தி பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


"கரூரில் தனிப்பட்ட கணக்கு ஒன்று உள்ளது"


விழாவில் தொண்டர்களிடையே ஆவேசமாக உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, "கரூர் விவகாரத்தில் த.வெ.க-விற்கு என்று ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் த.வெ.க ஒருபோதும் விடாது. கரூர் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் விரைவில் வெளிவரும். கரூரில் காவல்துறையினரை ஏவி விட்டு, திட்டமிட்டு எங்கள் மக்களைக் கொன்று குவித்தார்கள்" என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தினார்.


"திட்டமிட்ட தி.மு.க-வின் சதி"




தேர்தலைக் கண்டு த.வெ.க ஒருபோதும் பயந்தது இல்லை என்று குறிப்பிட்ட அவர், இப்போது மீண்டும் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் திமுக.,வை டெப்பாசிட் இழக்க செய்வோம். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்றும், அது தி.மு.க-வின் திட்டமிட்ட சதி என்றும் சாடினார். காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, கரூரில் வேண்டுமென்றே கூட்ட நெரிசலை தி.மு.க அரசு உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க ஆட்சியில் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் வரும் போது, இதே போன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்யத் திட்டமிட்டதாகவும், மீண்டும் அத்தகைய அசம்பாவிதங்களை உருவாக்க முயன்றதால் தான் விஜய் தனது இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் விளக்கமளித்தார்.


"கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"


தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "கரூர் மக்களின் கண்ணீரின் பாவத்தால் தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். கரூர் மக்களின் சாபம் சும்மா விடாது. இந்தத் தமிழ்நாட்டின் வரலாற்றில், கருணாநிதி குடும்பத்தில் இருந்து வரும் கடைசி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்" என்று மிக ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். 


60 சதவீதம் அதிமுக வந்து விட்டது :


அதிமுக.,வில் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது மகனும் மட்டும் தான் இருக்கிறார்கள். இப்போது 60 சதவீதம் அதிமுக இங்கு வந்து விட்டது. இன்னும் சில நாட்களில் 90 சதவீதம் அதிமுக இங்கு வந்து விடும். தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என கூறும் எடப்பாடி பழனிச்சாமி, மகனிடம் தான் முக்கிய பொறுப்புக்கள் பலவற்றை வழங்கி உள்ளார். திமுக.,வும், அதிமுக.,வும் விரைவில் இணையும் என ஆதவ் அர்ஜூனா பேசி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்