கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்

Aug 18, 2026,05:47 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


பச்சையமும்

இச்சையாய்ப்

பரிதியினைப்

நோக்க!


நாணல்

கொண்ட

பூக்கள் தலையசைத்து

நர்த்தனமாட!


நாற்றிசையும்

தூய்மையான 

காற்றால்

நிரம்பிட!


நட்புகளும்

இளமையின்

இனிமைகளை இதயத்திலிருந்து

மீட்க!




மழலைகள்

மண்ணைப் பிசைந்த

சிலைகளும்

வடிக்க!


சிந்தனை

சிறகடித்து 

நுட்பமாக 

சிறந்து

விளங்க!


உச்சி வெயில்

குளிர்ந்து 

உன்னத

அல்லலைத் தேடிட!


கார்மேகங்களோடு

முட்டிமோதி

களிப்புற்று

மகிழ!


வானம்

உடுத்திய சிவப்பு

சேலையும்

கறுப்பாக!


நிலாமகளுடன்

விண்மீன்களும்

வீரநடைப்

பழக!


வீட்டினுள்ளே

வித்தைகள்

புரிந்து விட்டு

உறங்கிட!


விடியலும்

விருப்பாகி

கனாக்கள்

களைத்திடுமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்