"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

Jul 02, 2026,04:31 PM IST

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் குதிரை பேரம் பேசி இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது கடுமையான கண்டனங்களையும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார். 


"மு.க.ஸ்டாலின் பேசியதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது"

அண்மையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அந்தப் பேச்சின் பின்னணியில் உள்ள அசல் காரணம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பெ. சண்முகம் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,


"ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதைத் திமுகவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், தாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்தகைய திரைமறைவு முயற்சிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதற்கான தீவிரமான முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர் என்பதன் வெளிப்பாடுதான், தற்போது சட்டமன்ற உறுப்பினர்களைப் பெரும் தொகைக்கு விலை பேசியதாக வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் செய்திகள்."


கட்சி மாறுவது சகஜம்தான்... 




தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாறுவது புதிய விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அதற்குப் பின்னால் நடக்கும் பணப் பரிமாற்றக் கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் விளக்கியதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குப் பிடித்தமான கொள்கை அல்லது சூழ்நிலை காரணமாகத் தாங்களாகவே ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேருவது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடந்து வரும் ஒரு சகஜமான விஷயம் தான்.


குறிப்பாக, ஆளும்கட்சி மாறுகின்ற காலகட்டங்களில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தலைவர்கள் மாறுவது பலமுறை நடந்திருக்கிறது. அவ்வாறு விருப்பப்பட்டு மாறுவது தனிப்பட்ட அரசியல் உரிமை. ஆனால், ஒரு மக்கள் பிரதிநிதியைக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி, குதிரை பேரம் நடத்தித் தங்கள் பக்கத்திற்கு இழுப்பது என்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு: 

சட்டமன்ற உறுப்பினர்களைப் பெரும் பணத்தைக் காட்டி இழுக்க முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் இந்த அதிரடி அறிக்கை, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட குதிரை பேர அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்