என்னவென்று சொல்வதடி?
Jun 26, 2026,03:00 PM IST
- பாவலர் மாயோன் மங்கை
ஏனடி பழகினாய்
ஏனடி விலகினாய்
ஏனடி காதலித்தாய்
ஏன் உளம் பேதலித்தாய்
ஓராயிரம் காதலைத் தந்து
பாராது நீ போவதேனோ
நோவாகிப் போனேனடி
பாயோடு பாயாகவே
போடிபோ உன் இனமே
இரட்டைவேடதாரிகள்
சும்மா கிடந்தவனைச்
சுட்டும் விழிச்சுடராலே
சூடாக்கிவிட்டதென்ன
தேடாதிருப்பதென்ன
நானாக நான் இல்லையடி
நீயாகவே நினைவாலே
இல்லை
எப்படியோ வீழ்ந்து தொலை
என்பதா