போதும் காற்றே உன் பேச்சை நிறுத்து!!
Aug 12, 2026,10:42 AM IST
- பொள்ளாச்சி பாவலர் மாயோன்மங்கை
நீ தூங்கும் போது
நான்உனைத் தீண்டி எழுப்புகிறேன்
உயிர்க் காதலி உனக்காகக் காத்திருக்கிறாள்
உறக்கம் எப்படியடா
வருகிறது உனக்கு?
தூதுபோகக் கூறினாய்
தூயவளை அழைத்து வருவதற்குள்!!
போதும் காற்றே
உன் பேச்சை நிறுத்து!!
நீ அவளை அழைக்கிறாயா?
அனைக்கிறாயா?
என்ற கவலையில் சற்று இமை மூடினேன்
உறங்குவதாக என் காதலைத்
தூற்றுகிறாயே
காதலியை எனக்குத்
தந்துவிடு