ஆசையில் மூழ்கும் உலகம்!

Su.tha Arivalagan
Apr 17, 2026,05:00 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


என்ன கொண்டு வந்தாய் நீ

அதை  உன்னுடனே

எடுத்துச் செல்ல


இறைவன்   மனிதனுக்காகக்

கூறிய வாசகம்  மனிதா

ஆசையை ஒழி


ஆசையே அலை போலே

உலகமே அதன் மேலே

ஆடும் ஓடங்களாக


சாப்பாட்டுக்கு உப்பு  பத்தலயே  

சொல்லுகிறோமே   

உணவு மேல் ருசி  ஆசை




நாளும் நவநாகரீக உடை உடுத்தனும்  

வெளியில் செல்ல வேண்டும்

இதுவும்  ஆசைதான்


அடுத்த வீடு எதிர்த்த வீடு

பக்கத்துவீடு போல்  நாமும்  படோபடமாக

வாழனும்  இதுவும் ஆசைதான்


போரில் ஒருவருக்கொருவர்

வெல்லவேண்டும் 

பல்லுயிர் பலியானாலும் என் ஆட்சி  நிலவ வேண்டும்

மண் ஆசை


உலகச் சக்கரம் ஒன்றையொன்று

இழந்து தான் மற்றதைப் பெறுகிறது

இதற்குக்காரணம் ஆசைதான்


புத்தர்  துன்பத்திற்குக் காரணம்  எனக் கூறியது

ஆசையைத்தான்


வாழ்வதற்கு அடிப்படை

உழைப்புதான்   உழைப்போர்க்கு  நாளும்சம்பளம்  பெறனும்

இது ஆசைதான்


அளவோடு வைக்கவேண்டும் பற்றுக்களை

மீறும்போது அழிவு தருவது

பேராசை தானே


போதும் என்ற மூன்றெழுத்து 

உயரச் செய்யும் 

பிறகெதற்கு ஆசை


பொய் பேச திருட  உயிரைக் கொல்ல 

அடுத்தனைப் பழித்தல் தீயபழக்கத்தை

உண்டாக்குவது  இதே

ஆசைதான்


உலகமே  பொறாமை

விட்டுக்கொடாமை  ஒருவரைக் கீழே தள்ளி

அவர்மேல் நடக்கிறது

ஆசையாலே


ஆடையில்லாதவன்

அரை மனிதன் என்பர்.

ஆனால் இந்தக் காலச்

சூழல் ஆசையில்லாதவன்

மனிதனே இல்லை!