ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!
Jul 27, 2026,01:32 PM IST
- பாவலர் மாயோன்மங்கை
பாவாடை தாவணியிலெ
பாத்துப் பாத்து ரசிச்சவ நான்
படிக்கப் போயிவந்தே
துடிக்குதடி மாமன் நெஞ்சு
ஒத்தசடை போட்டு ஒரு
ரோஜா காதோரம்
காதலைச் சொல்லும் கையைப் பிடித்து இழுக்கச் சொல்லும்
வெளியூருக்கு போனாயே
வெட்கமுமே விட்டுவந்தாய்
நீண்ட சடை காணோம்
நெத்தியிலே பொட்டு
காணோம்
உதட்டுலே சாயத்தத்தான் ஒப்பனையா காட்டறயே
மாமனெப் பார்த்தாக்கா
மாராடை இழுத்து விட
மஞ்சள் முகம் சிவப்பாகும்
சந்தனமேனி சிலிர்ப்பாகும்
அத்தான் நான் பார்க்க வேண்டி
பாதக் கொலுசுகளே
பாட்டுக்கேத்த தாளமிடும்
பாவை விழி அலைபாயும்
என்னாச்சுடி உனக்கு
ஏன் இந்த அலங்கோலம்
கண்களில் மருட்சி இல்லெ
பாதங்களோ பாடவில்லை
மாராடை சரிசெய்யும்
விரல்களுக்கோ வேலை இல்லை
எனக்கும்
விளங்கவில்லை
வேறே ஊர் போனா
விலகிடுமா பண்பாடு
தவிர்க்கறே
பெண்களே ஆண்களைப்
பித்தாக்கும் உத்திகள்
உங்களிடமே