பாக்கு வெத்தல மாத்த வா

Su.tha Arivalagan
Aug 05, 2026,03:09 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


ஆண்


ஒத்தையடிப்

பாதையிலே

ஓரங்கட்டும்

பொண்ணு எவ


ஒதுங்கி நிற்க

இடமில்லேன்னு

பதுங்கிப் பார்த்து

நிக்கறவ


பெண்


அத்தமவ. 

ஒத்தையிலெ

கொத்துப்பூவா

நிக்கறனே




கண்ணு ரெண்டு

தெரியலயா

பொண்ணு இவளப்

புரியலயா


ஆண்


அடையாளம் 

தெரிஞ்சு தான் டி

அந்திப்பொழுதில

வந்திருக்கே 


முந்திக்கிட்டு

கோபத்தோடு

முறச்சு  முறச்சு

பாக்கறயே


பெண்


பரிசம்போட்டா

உரிமையோட

பக்கத்தேவந்து

நிற்பனே


பாக்குவெத்தல 

மாத்திவச்சா

சாக்குசொல்லாமத்

தந்திடுவேன்