"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

Su.tha Arivalagan
Aug 13, 2026,10:48 AM IST

- பொள்ளாச்சி பாவலர் மாயோன் மங்கை


ஏம்மா

சரியா நாலு மணிக்கு கிளம்பனும்

இன்னைக்கு ரிஷப்ஸன்  இருக்குதில்லெ என்றார் கனவர்


என்னங்க

தெரியும் நான் கொஞ்சம் வேலையாக

வெளியே செல்லும்

அங்கே வந்து பிக்அப்

பண்ணறீங்களா


சரி சரி


வர்றேங்க

ஏம்மா டிரஸ் எடுக்காமப்போறே


இல்லீங்க அதெல்லாம்

ரெடியாயிட்டுது




மாலை நாலு மணி

கனவர் போனில் அழைக்கிறார்


ஆமாங்க

நான் ரெடி  ஸ்ட்ரைட்டா

பியூட்டி பார்லர் வந்திடுங்க


கனவன் பார்லர் முன் காரை

நிறுத்த மனைவியும்

வருகிறாள்

கனவன் அசந்து போகிறான்


மனைவி அமர்ந்ததும்

கார் கிளம்பியது

என்னங்க

விசேசத்துக்குப் போகாமெ வீட்டுக்கு வண்டிய விடறீங்க


இறங்கு இறங்கு

கொஞ்சம் ஒப்பனை பத்தலெ

அதையும் போட்டுட்டுப்

போவோம்


வீட்டிற்குள் வந்ததும்

கனவர் ஷோபாவில்

அமர்ந்து கொண்டு மனைவியைப் பார்க்கிறார்


ஏம்மா

இதெல்லாம் எதற்காக

தலையிலே மலைஉச்சிக் கொண்டை


உதட்டினிலே சிவப்புச்சாயம்

இது சேலையா

கேட்கிறேன்  இதுசேலையா


உள் உறுப்புகளைக் காட்டுவது ஆடையா

ஏன்

உனக்கு என்னாச்சு மா


ஆமாங்க

எனக்கு என்னமோ ஆச்சு


நாம் போகிற விசேசங்களில் எல்லாம்  பெண்களே

உங்களைப் புகழ்கிறார்கள்


உங்கள் அழகை மெச்சுகிறார்கள்

உங்கள் பேச்சை ரசிக்கிறார்கள்


என்னிடமே

நீங்க செய்த வரம்

இப்படி‌நல்ல கனவன்

கிடைத்தார்

உங்களுக்கும் அவருக்கும் பொருத்தம் இலைங்கறாங்க


நான் நிறம் சுமாராம்

நீங்க சந்தனக்கலராம் ஈடில்லையாம்

அதுதான் இன்று என்னை  நான் ஒப்பனை  செய்து கொண்டேன்

என்க


அடப்போடி பைத்தியக்காரி

இதுதானா விசயம்


என்னோட பிரண்ட்ஸ்

என்ன சொல்லறாங்க

தெரியுமா


நீங்க லக்கிமேன்

ஹவுஸ் வைப்னா

இப்படித்தான் இருக்கனும்

அடக்கம்  

யாரோடையும் சிரித்து வழியாது

சில்க் சாரியிலெ

மகாலட்சுமி மாதிரின்னு  சொல்வாங்களே

நான் சந்தோசப்படுவேன்


அப்படீங்களா

அவள் கேட்க

பின்ன எப்படியாம்

என்று சொல்லி


போம் மா

போய் அந்த மஜந்தாகலர்லெ மெருன் பார்டர் லைனிங் சில்க்  ஸாரியும்

முத்து நெக்லஸ்

ஒரே ஒரு லாங் செயின்  ஒருகையில் வளை  மறு கையில் வாட்ச்

பிரிட்ஜ்ல இருக்கற மல்லிகை ரோஜா ஒன்று  வைத்தே

சடைபோட்டுக்கோ என்கிறார்


அவள் அழுகிறாள்


ஏன் அழுகறெ என்க


என்னை உங்களுக்குப்

பிடிக்குமா

என்கிறாள்


பிடிக்காமலா உன்னோடு வாழுகிறேன் என்க


அவளுக்குச் சிரிப்பு

உடனே போய் அனைத்தையும் கனவரின் விருப்பமாக

வருகிறாள்


ரிஷப்ஸன் நிறைவாகிறது

வீட்டிற்கு வந்ததும்

வாம்மா நீயும் நானும்

ஒரு  ஷெல்பி எடுப்போம்


அவளுக்கு ஆனந்தம் மிக வாக


ஏங்க உங்களுக்கு நான் பொருத்தமா இல்லையா என்க


அடி அசடு

நீ பெண் பார்க்க வந்தப்ப எப்படி எனக்கு

பிடிச்சவளா இருந்தாயோ


அதே போல இப்பவும்

எப்பவுமே  நீ எனக்கே

என்க


அவளுக்கு

ஆனந்தக் கண்ணீருடன்

அவர் மார்பில்  சாய்ந்து கொண்டாளாம்


என்னங்க

கதை பிடிச்சுருந்தா

லைக் போடுங்க


பிடிக்காட்டி

லவ் போடுங்க