தொடுவானம் தூரமில்லை!

Su.tha Arivalagan
Jun 03, 2026,02:15 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


மனிதனே எடுத்த அடி

துலங்கிட

இடும் அடிகளும் விளங்கிட

திரும்பிப் பார்கும்

நேரத்தில்

திசையைத் தொட்டு

விடு


பூமிக்குள் விதையொன்று மிகப்

போராட்டத்தோடுதான்

முட்டிவரும்


முயற்சியின்றி நீ கிடந்தால் விதைமேலே

முள்ளள்லவா முளைத்திருக்கும்




பாறைக்குக் கீழே வேருமே விருட்சத்திற்கு முயற்சியே அல்லவா


இலக்கை எய்த சோர்வு கொள்ளாதே

பாதி தூரம் சென்றபின்

மீதிதூரத்தைப்  பீதிகொள்ளாதே


மனதை வசப்படுத்து

வானத்து வண்ணவில்லும் வளைத்து வெற்றி கொள்வாய்


கூரை மேல் ஏணியைப் போட்டால்

கோழியைத்தான்

பிடிக்க முடியும்


வானத்தின் மேல் ஏணியை நிறுத்து

உனது கரங்களில்

நிலவும் கதிரும் தாரகையும் தானாகக் கிடைக்கும்


கைகளை நீட்டு

வானம் தூரமாகுமேதவிர 

துயரமாகாது

மேலும் நட நட நட


துணிந்தவர் தோல்வி

அடைந்த தில்லை

பனிந்தவன் வீழ்ந்தது ம் 

வரலாறு கண்டதில்லை


தொட்டுவிடு தொடுவானம்

உன் விரல் நுனியில்